ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனை… விரைவில் அல் நஸ்ர் அணியில் விளையாடுகிறார்…

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனை… விரைவில் அல் நஸ்ர் அணியில் விளையாடுகிறார்…

அல் நஸர் அணி ஜெர்ஸியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ

அல் நஸர் அணி ஜெர்ஸியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ

ரூ. 4,400 கோடி ரொனால்டோவுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அதைவிட பல மடங்கு விளம்பரம் மற்றும் லாபத்தை அல் நஸ்ர் அணி பெரும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறியுள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் கால்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் அல் நஸ்ர் அணிக்காக விளையாடவுள்ளார். போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில், போர்ச்சுகல் அணி,காலிறுதியில் மொராக்கோ அணியிடம் தோற்று வெளியேறியது. இதனால் மனமுடைந்து போன கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த காட்சிகள் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. போர்ச்சுக்கல் தேசிய அணியை தவிர்த்து ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு விளையாடி வந்தார். இந்நிலையில் அவரை சவுதி அரேபியாவை சேர்ந்த அல் - நஸ்ர் என்ற கால்பந்தாட்ட அணி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரை ரொனால்டோவுடன் அல் நஸ்ர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. ரொனால்டோ எப்போது மீண்டும் கால்பந்தாட்ட மைதானத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அல் நஸ்ர் அணியில் இணைவதற்கு முதற்கட்டமாக, ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து, சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு தனி விமானத்தின் மூலம் ரொனால்டோ செல்கிறார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்’ - முன்னாள் பயிற்சியாளர் கணிப்பு

இவற்றை முடித்துக் கொண்ட பின்னர் அவர் கால்பந்தாட்ட அணியில் இணைந்து விளையாடுவார். ரொனால்டோ விளையாடுகிறார் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அல் நஸ்ர் கால்பந்தாட்ட அணியின் சமூக வலைதள கணக்குகளை பின்தொடர்வோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

சதம் அடித்த டெவோன் கான்வே… பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி ஆதிக்கம்…

ரூ. 4,400 கோடி ரொனால்டோவுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அதைவிட பல மடங்கு விளம்பரம் மற்றும் லாபத்தை அல் நஸ்ர் அணி பெரும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறியுள்ளனர்

First published:

Tags: Cristiano Ronaldo, Football