Home /News /sports /

செஸ்ஸபிள் செஸ்: இறுதிப் போட்டியில் சீன வீரரின் பாராட்டைப் பெற்றார் பிரக்ஞானந்தா; செஸ் பண்டிதர்களையே பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்

செஸ்ஸபிள் செஸ்: இறுதிப் போட்டியில் சீன வீரரின் பாராட்டைப் பெற்றார் பிரக்ஞானந்தா; செஸ் பண்டிதர்களையே பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

செஸ்ஸபிள் செஸ் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனை எதிர்கொண்ட சென்னையைச் சேர்ந்த இளம் ஜீனியஸ் பிரக்ஞானந்தா ரன்னர் ஆக நிறைவு பெற்றார். பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தைப் பார்த்து சீன வீரரே கரகோஷம் செய்து பாராட்ட, பண்டிதர்களே இவரது திறமையைப் பார்த்து பிரமித்தனர்.

மேலும் படிக்கவும் ...

    செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். இதனால், அடுத்த செட்டை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் பிரக்ஞானந்தாவுக்கு ஏற்பட்டது. இதில் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி செட்டை வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது.

    2 நாள் நடந்த ஆன்லைன் வழியேயான இறுதி போட்டியின் இறுதியில் டை பிரேக்கரில் சீன வீரர் திங் லிரன் வெற்றி பெற்றார். எனினும், அவரை பிரக்ஞானந்தா எளிதில் வெற்றி பெற விடவில்லை. முதல் செட்டை திங் வென்றபோதிலும், அடுத்த செட்டில் திங் லிரனையே பிரமிக்கச் செய்தார். இதேபோன்று, பிரிலிமினரி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

    ரவுண்ட் ராபின் போட்டியில் 4வது இடம் பெற்றார். வெய் யி மற்றும் அனிஷ் கிரி ஆகியோரை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இனி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன.

    சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். 2 மாத கால அளவில், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளையாட பிரக்ஞானந்தா தயாராகவுள்ளார்.

    பிரக்ஞானனதாவின் ஆட்டத்தை பார்த்து சீன வீரர் திங் லிரனே கரகோஷம் செய்தார். வர்ணனையாளர், செஸ் வல்லுநர், டேவிட் ஹோவெல், “எனக்கு பேச்சே வரவில்லை, பிரக்ஞானந்தாவை புகழ்வதற்கு வார்த்தைகளை தேடுகிறேன். இப்போது மிகவும் பிரமாதமாக ஆடுகிறார் பிரக்ஞானந்தா” இல்லையெனில் 15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியுமா?
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa

    அடுத்த செய்தி