இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தார் பிரக்ஞானந்தா
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தார் பிரக்ஞானந்தா
ஐஓசியில் இணைந்தார் பிரக்ஞானந்தா
கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசி பணியில் இணைவார்.ஐஓசியால் பணி வழங்கப்பட்டுள்ளதற்கான கடிதம் அளிக்கப்பட்டது.
கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசி பணியில் இணைவார்.ஐஓசியால் பணி வழங்கப்பட்டுள்ளதற்கான கடிதம் அளிக்கப்பட்டது.
கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசியின் பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்.வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சி. அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரக்ஞானந்தா இது தொடர்பாக தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த போது “IOC உடன் பணியாற்றிய பல செஸ் வீரர்களை நான் அறிவேன், அது அவர்களை எப்படி ஆதரிக்கிறது என்பதையும் அறிவேன். ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது செஸ் வாழ்க்கையில் எனக்கு பெரிய ஆதரவாக இருக்கும்.” என்றார்.
ஐஓசி சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறும்போது, “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் அருமையான ஒரு பொருளாதார அமைப்பு முறை உள்ளது. உண்மையில் கடந்த அக்டோபர் மாதம், குடியரசுத் தலைவர் ஐஓசியை சிறந்த விளையாட்டு பொதுத்துறை நிறுவனமாக கௌரவித்தார்.
பிரக்ஞானந்தா சமீபமாக செஸ் ஆட்டத்தில் பிரமாதமாக ஜொலித்து வருகிறார், எனவே அவரை தேர்வு செய்வது என்பது இயல்பான ஒன்று. ஐஓசி ஊக்குவிக்கும் விளையாட்டுகளில் செஸ் ஒரு பெரிய அளவு கவன ஈர்ப்பைப் பெறுகிறது. நாட்டுக்காகவும் ஐஓசிக்காகவும் பெரிய அளவில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தும் திறமை பிரக்ஞானந்தாவிடம் உள்ளது” என்றார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.