ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

5 வயது முதல் செஸ்.. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ்!

5 வயது முதல் செஸ்.. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ்!

கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்

கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்

ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 8 புள்ளிகள் எடுத்ததன் மூலம் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக ஆக அவர் உயர்ந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தை சேர்ந்த 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். ஐந்து வயது முதல் செஸ் போட்டியில் விளையாடி வரும் காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பல பட்டங்களை வென்று உள்ளார்.

12 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் பிரனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் எட்டு புள்ளிகள் எடுத்ததன் மூலம் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக ஆக அவர் உயர்ந்திருக்கிறார். தமிழகத்தின் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28வது வீரர் பிரனேஷ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chess, Sports Player