முகப்பு /செய்தி /விளையாட்டு / செஸ் இறுதிக்குள் நுழையும் போது இரவு 2 மணி; இன்று காலை 11-ம் வகுப்புத் தேர்வு: இருந்தால் என்ன ரெடி என்கிறார் பிரக்ஞானந்தா

செஸ் இறுதிக்குள் நுழையும் போது இரவு 2 மணி; இன்று காலை 11-ம் வகுப்புத் தேர்வு: இருந்தால் என்ன ரெடி என்கிறார் பிரக்ஞானந்தா

யங் ஜீனியஸ் பிரக்ஞா நந்தா

யங் ஜீனியஸ் பிரக்ஞா நந்தா

சென்னையைச் சேர்ந்த செஸ் உலகின் நட்சத்திரமான ‘ஒண்டர் பாய்’, 16 வயது ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா நேற்று செஸ்ஸபிள் செஸ் போட்டியின் அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தும் போது மணி 2. ஆனால் இன்று காலை அவருக்கு 11ம் வகுப்புத் தேர்வும் உள்ளது, இதற்காக காலை 8:45க்கெல்லாம் அவர் பள்ளிக்கு வர வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையைச் சேர்ந்த செஸ் உலகின் நட்சத்திரமான ‘ஒண்டர் பாய்’, 16 வயது ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா நேற்று செஸ்ஸபிள் செஸ் போட்டியின் அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தும் போது மணி 2. ஆனால் இன்று காலை அவருக்கு 11ம் வகுப்புத் தேர்வும் உள்ளது, இதற்காக காலை 8:45க்கெல்லாம் அவர் பள்ளிக்கு வர வேண்டும்.

இது குறித்து பிரக்ஞானந்தாவே கூறும்போது, “நான் காலை 8:45 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும், ஆனால் இப்போதே மணி இரவு 2 மணி” என்று கூறினார்.

நேற்று அனிஷ் கிரியுடனான அரையிறுதிப் போட்டியில் முதல் கேம் டிரா ஆக, 2வது ஆட்டம் சூடு பிடித்தது. ஒரே தடுப்பு வியூகம் மட்டும் மீதமிருக்க நெதர்லாந்து வீரருக்கு பிரக்ஞானந்தா கிடுக்கிப் பிடி போட்டார் அனிஷ் கிரி தனக்கிருந்த ஒரே தடுப்பு வாய்ப்பையும் நழுவ விட எண்ட் கேம். செக் மேட் பிரக்ஞானந்தா முன்னிலை வகித்தார்.

3வது கேமில் கிரி வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலை. இந்த ஆட்டத்தில் சிலபல நகர்வுகளினால் இருதரப்புக்கும் சாதக பாதகங்கள் மாறி மாறி வந்தன. கடைசியில் அனிஷ் கிரி பிரக்ஞானந்தாவின் தடுப்பு வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பிரக்ஞானந்தாவின் ஒரு மூவ் அனிஸ் கிரியின் வாய்ப்பை முறியடிக்க ஆட்டம் ட்ரா ஆக பிரக்ஞானந்தா 2-1 என்று முன்னிலை வகித்தார்.

அடுத்த கேம் கொஞ்சம் ட்ரிக்கியானதுதான். ஒரு நகர்வு பிரக்ஞானந்தாவின் கதையை முடித்திருக்கும் கத்தி முனை ஆட்டம், ஆனால் பிரக்ஞானந்தா அருமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் ஒரே ஒரு நகர்வில் பிரக்ஞானந்தா தவறிழைக்க செக் மேட், 2-2 என்று ட்ரா நிலை எய்தியது. இதனையடுத்து டை பிரேக்.

டைபிரேக்கில் அனிஷ் கிரி தவறு மேல் தவறு செய்தார். இதனால் இருபுறமும் பிரக்ஞானந்தா அட்டாக் செய்ய வழி கொடுத்து விட்டார். ஒரு காயையும் பறிகொடுத்தார், இதனையடுத்து கிரி சோர்வடைந்தார். ஆனால் உடனடியாக எழுச்சி பெற்ற அனிஷ் கிரி டாப் கேமை காட்டினார், ஆனால் மீண்டும் ஒரு நழுவல் பிரக்ஞானந்தா அவரது பான் காயை வெட்டினார். இதன் பிறகு கிரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ட்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது, ஆனால் இது பிரக்ஞானந்தாவுக்கு வெற்றி. அதனால் இறுதிக்குள் நுழைந்தார். இன்று காலை 11ம் வகுப்பு தேர்வுக்குள் நுழைந்து இதையும் கிளியர் செய்ய வேண்டும், செய்து விடுவார் இந்த யங் ஜீனியஸ்!!

First published:

Tags: Chess, Praggnanandhaa