• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஸ்பெயின் ஓபன் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி நேத்ரா குமணன்..

ஸ்பெயின் ஓபன் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி நேத்ரா குமணன்..

Nethra kumanan

Nethra kumanan

படகுப் பந்தய பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை

  • Share this:
ஸ்பெயினில் நடைபெற்ற ஓபன் படகுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்.

சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மெகானிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பு படித்து வருபவர் நேத்ரா குமணன். இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கிரான் கனேரியா சாம்பியன்ஷிப் படகுப் போட்டித் தொடரில் கலந்து கொண்டு லேசர் ரேடியல் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டம் பெற்று தங்கம் வென்றுள்ளார். இது ஐரோப்பாவின் மண்டல அளவிலான ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.

இந்தப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 3 வீரர்கள் உட்டட 3 நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயினின் Beneyto Lancho மற்றும் Martina Reino Cacho ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்தனர்.

Also read:   கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்போகும் போப் பிரான்சிஸ்

தங்கப் பதக்கம் வென்ற நேத்ரா குமணனை இந்திய விளையாட்டு ஆணையம் பாராட்டியிருக்கிறது.



ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றவர்:

ஏற்கனவே டோக்யோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று, படகுப் பந்தய பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் ஒட்டுமொத்த அளவில் 10வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் 23 வயதாகும் நேத்ரா குமணன். ஆசியப் பிரிவில் இவர் ஒலிம்பிற்கு தகுதி பெற்ற போது தனக்கு அடுத்து இருந்த வீராங்கனையை விட அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தகுதி பெற்று அசத்தியிருந்தார்.

Also read:  வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்…

இவர் 2020ம் ஆண்டு அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை படகுப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்

தற்போது இவர் ஸ்பெயினில் தங்கியிருந்து படகுப் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு பயிற்சி அளிக்கும் ஹங்கேரியின் டமாஸ் எஸ்செஸ் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர் ஆவார். மேலும் 2018 ஆசிய போட்டியில் நூழிலையில் பதக்கத்தை தவற விட்டு நான்காம் இடத்தார் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: