முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்…

செக் குடியரசு வீராங்கனை லிண்டா.

செக் குடியரசு வீராங்கனை லிண்டா.

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா ஃப்ருவிட்ரோவாவு-க்கு WTA 280 புள்ளிகள், கேடயத்துடன் 26லட்சத்து 44ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் 17 வயதான செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிட்ரோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு செக் குடியரசின் 17 வயதான லிண்டா ஃப்ருவிட்ரோவாவும், போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் தகுதி பெற்றனர்.

இன்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தின்போது, முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை மேக்டா கைப்பற்றினார்.

T20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!

இதையடுத்து, சுதாரித்துக் கொண்டு அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த லிண்டா, 6-3, 6-4 என்ற அடுத்தடுத்த செட்களில், மேக்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

WTA தொடரில் லிண்டா வெல்லும் முதல் சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். கடைசி செட்டில் லிண்டா முதலில் 1-4 என பின் தங்கியிருந்தார். பின்னர் கவனமாக விளையாடி, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

‘இது எனக்கு துக்கமான நாள்’ - ரோஜர் பெடரர் ஓய்வு முடிவுக்காக நடால் வேதனை

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா ஃப்ருவிட்ரோவாவு-க்கு WTA 280 புள்ளிகள், கேடயத்துடன் 26லட்சத்து 44ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாம்பியன்ஷிப் கேடயம் வழங்குகிறார்.

2ஆம் இடம் பிடித்த மேக்னா லினெட்-க்கு WTA 180 புள்ளிகள், கேடயத்துடன் 15லட்சத்து 73ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

top videos

    முன்னதாக நடைபெற்ற இரட்டையர் இறுதி போட்டியில் கனடாவின் கேப்ரியல்லா-பிரேசிலின் லுசா இணை, ரஷ்யாவின் அன்னா லின்கோவா-ஜார்ஜியாவின் நடிலா இணையை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கனடா-பிரேசில் இணை 6க்கு1, 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

    First published:

    Tags: Tennis