• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி!

நேத்ரா

நேத்ரா

இளவேனில் வாலறிவனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு பெண் டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

  • Share this:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டிக்கு சென்னையை சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார்.

ஓமன் நாட்டில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய நாடுகளுக்கு தகுதி சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது.
பாய்மர படக்குப்போட்டியின்  லேசர் ரேடியல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 23 வயதான நேர்தா குமணன் முதல் இடம் பிடித்து புள்ளிகளின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில்  பாய்மர படகுப்போட்டியில் இதற்கு முன் ஒன்பது வீரர்கள் பங்கேற்றிருந்தாலும் வீராங்கனையாக முதல் முறையாக நேர்தா களமிறங்குகிறார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

ஏற்கனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இளவேனில் வாலறிவன், 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: