Home /News /sports /

பிரக்ஞானந்தாவின் ‘மாஸ்டர்பீஸ்’-தோல்வியிலிருந்து மீண்டெழுந்து டாப் வீரரை வீழ்த்தினார்

பிரக்ஞானந்தாவின் ‘மாஸ்டர்பீஸ்’-தோல்வியிலிருந்து மீண்டெழுந்து டாப் வீரரை வீழ்த்தினார்

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

மெல்ட்வாட்டர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரான ஈரான் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீய்மான் என்பவரை வீழ்த்தி 3 புள்ளிகளைப்பெற்றார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மெல்ட்வாட்டர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரான ஈரான் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீய்மான் என்பவரை வீழ்த்தி 3 புள்ளிகளைப்பெற்றார்.

    முதல் ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா நீய்மானின் ஆக்ரோஷத்துக்கு ஈடு கட்டி ஆட வேண்டியிருந்தது, இதனால் இருவரும் முக்கிய பவர்களை இழந்தனர், கடைசியில் பவர்களே இல்லாமல் ராஜா, பிஷப் என்று பிரக்ஞானந்தா தனித்து விடப்பட்ட நீய்மானின் 2 பான்கள் பிரக்ஞானந்தா பகுதியின் பவர் எடுப்பதற்கு அருகில் நிறுத்தப்பட ஆட்டம் நீய்மான் பக்கம் சாய்ந்தது, வென்றார்.

    ஆனால் 2வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா மீண்டெழுந்தார். பிரமாதமான வெள்ளைக்காய்கள் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா நீய்மானின் ஆக்ரோஷத்துக்கு பதிலுக்குப் பதில் கொடுத்து பவருக்கு பவர் எடுத்து கடைசியில் அவரது ராஜாவை முடக்கி வெற்றி பெற்றார். இதை கிராண்ட் மாஸ்டர் பீட்டர் லீக்கோ வர்ணிக்கையில் ‘பண்டாஸ்டிக் பொசிஷனல் மாஸ்டர் பீஸ்’ என்று பாராட்டினார்.

    3வது ஆட்டத்தை பிரக்ஞானந்தா, நீய்மான் ட்ரா செய்ய 4ம் ஆட்டத்தில் ஆட்டம் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் கடைசியில் நீய்மான் மிகப்பெரிய தவறைச் செய்ய அதைப் பயன்படுத்தி அவரை முடக்கி வெற்றி பெற்றா பிரக்ஞானந்தா. இதனால் 2.5-1.5 என்று பிரக்ஞானந்தா வென்றார்.

    நார்வே உலக சாம்பியன் கார்ல்சன், லெவான் ஆரோனியனை வீழ்த்தினார். இதன் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றார் கார்ல்சன். இப்போது பிரக்ஞானந்தா, கார்ல்சன் இருவருமே 9 புள்ளிகளுடன் டாப் ஸ்பாட்டில் உள்ளனர். ஆரோனியன் மற்றும் ஈரானின் அலிரெசா 5 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa

    அடுத்த செய்தி