Home /News /sports /

மெல்ட்வாட்டர் செஸ்: உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா

மெல்ட்வாட்டர் செஸ்: உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின் பகுதியாக மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் போட்டிகள் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஈரானின் உலகின் நம்பர் 1 வீரரான அலிரேசா ஃபிரவ்ஸ்ஜா என்பவரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின் பகுதியாக மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் போட்டிகள் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஈரானின் உலகின் நம்பர் 1 வீரரான அலிரேசா ஃபிரவ்ஸ்ஜா என்பவரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

    இந்தத் தொடரில் நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் உட்பட உலகின் முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 7 சுற்றுகள் கொண்டது.ஒவ்வொரு சுற்று வெற்றிக்கும் தலா ரூ.6 லட்சம் பரிசு கிடைக்கும்.

    மொத்தம் 4 சுற்றுகள் கொண்ட போட்டியில்தான் பிரக்ஞானந்தா ஈரான் வீரரரை வீழ்த்தினார். இதில் வெள்ளை காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 44வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த போட்டியில் பிரக்ஞானந்தா தோற்றார், இதனையடுத்து ஸ்கோர் 1.0-1.0 என ஆனது.

    3வது போட்டியில் பிரக்ஞானந்தா கொஞ்சம் சிரமப்பட்டாலும் 76வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.4வது சுற்று ட்ரா ஆக பிரக்ஞானந்தா கணக்கில் 2.5.- 1.5 என்று ஸ்கோர் சேர வெற்றி பெற்றார்.

    முதல் சுற்று முடிவில் கார்ல்சன், போலந்தின் டுடா, பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் ஆகியோர் 3 புள்ளிகளுடன் உள்ளனர்.

    கார்ல்சன் நெதர்லாந்தின் அனீஷ் கிரியை வீழ்த்தினார். டுடா அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமென் என்பவரை வீழ்த்தினார்.

    பிரக்ஞானந்தா தன் சாதுரியமான ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரான அலிரேசா பிரவ்ஸ்ஜாவின் சிப்பாயை முதலில் காலி செய்து யானையை அற்புதமாகப் பயன்படுத்தி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். ஆனால் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரரான அலிரேசா திருப்பி பதிலடி வெற்றி பெற்றார், 3வது சுற்றில் பிரக்ஞானந்தா ஏறக்குறைய தோற்றிருக்க வேண்டியது ஆனால் எதிராளி செய்த சிறு தவறைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். 4வது போட்டியை ட்ரா செய்தார் பிரக்ஞானந்தா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa

    அடுத்த செய்தி