• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics: நண்பனே எனது உயிர் நண்பனே..- சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர்- ஒலிம்பிக்கில் முதல் முறை

Tokyo Olympics: நண்பனே எனது உயிர் நண்பனே..- சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர்- ஒலிம்பிக்கில் முதல் முறை

கத்தார் வீரர் பர்ஷீம், இத்தாலி வீரர் டாம்பேரி தங்கத்தைப் பகிர்ந்தனர்.

கத்தார் வீரர் பர்ஷீம், இத்தாலி வீரர் டாம்பேரி தங்கத்தைப் பகிர்ந்தனர்.

டோக்கியோ ஒலிம்ப்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாதவாறு ஆடவர் உயரம் தாண்டுதல் (ஹை ஜம்ப்) பிரிவில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷீம் என்ற வீரர் தங்கம் வென்றார், ஆனால் சக இத்தாலி உயரம் தாண்டுதல் வீரர் கியான்மார்கோ டாம்பேரியுடன் அதைப் பகிர்ந்து கொண்டார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்ப்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாதவாறு ஆடவர் உயரம் தாண்டுதல் (ஹை ஜம்ப்) பிரிவில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷீம் என்ற வீரர் தங்கம் வென்றார், ஆனால் சக இத்தாலி உயரம் தாண்டுதல் வீரர் கியான்மார்கோ டாம்பேரியுடன் அதைப் பகிர்ந்து கொண்டார்.

    இருவரும் நீண்ட கால நண்பர்கள், களத்தில் மட்டுமல்ல, களத்த்துக்கு வெளியேயும் நண்பர்கள்.

    30 வயது கத்தார் வீரர் பர்ஷீமும் 29 வயது இத்தாலி வீரர் டாம்பேரியும் உயரம் தாண்டுதலில் 2:37 மீட்டர் என்று முடிந்தனர். 2.39 மீட்டர் உயரம் தாண்டும்போது இருவரும் 3 முறை தோல்வியடைந்தனர்.

    எனவே டை பிரேக் அறிவித்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்னொரு ஜம்ப் செய்து வின்னரை முடிவு செய்யலாம் என்று வாய்ப்பளித்தனர்.

    அப்போது கத்தார் வீரர் பர்ஷீம், “2 தங்கப்பதகக்ங்கள் உண்டா?” என்று கேட்டார். அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

    பர்ஷீம் இந்தச் செய்கை பலருக்கும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பர்ஷீம் கூறும்போது, “நான் அவரைப் பார்த்தேன், அவரும் என்னைப் பார்த்தார், இருவருக்குமே தெரிந்தது, ஆட்டம் முடிந்து விட்டது எதற்காக இன்னொரு ஜம்ப்? தேவையில்லை என்று முடிவெடுத்தேன்.

    தடகளத்தில் மட்டுமல்ல வெளியேயும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எப்போதும் விளையாடுவோம். இப்போது கனவு நினைவாகியுள்ளது. இதுதான் உண்மையான ஸ்பிரிட், ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட், விளையாட்டு நல்லுணர்வு. இதனை நாங்கள் செய்தியாக ஒலிம்பிக்கில் வெளியிட்டுள்ளோம். தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இத்தாலி வீரர் டாம்பேரி கூறும்போது, “எனக்கு காயம் ஏற்பட்டு மீண்டும் வந்துள்ளேன். இப்போது இந்தத் தங்கப்பதக்கம், என்னால் நம்ப முடியவில்லை. நான் இதனை பல முறை கனவு கண்டுள்ளேன்” என்றார்.

    இதே ஹை ஜம்ப் பிரிவில் 2.37 மீ தாண்டிய பெலாரஸ் வீரர் மக்சீம் நெடாசெகாவ் வெண்கலம் வென்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் சகோதரர் பிராண்டன் ஸ்டார்க் இதில் ஆடி 2.35 மீ தாண்டி 5ம் இடம் பிடித்தார். பல ஜாம்பவான்கள் கலந்து கொண்ட இந்த ஹை ஜம்ப் போட்டியில் தங்கப்பதகக்த்தைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சித் தருணங்களை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: