Home /News /sports /

லக்‌ஷய சென், சாய்னா நெவால் சாதிப்பார்களா?- இன்று உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர்

லக்‌ஷய சென், சாய்னா நெவால் சாதிப்பார்களா?- இன்று உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர்

லக்‌ஷ்யா சென்

லக்‌ஷ்யா சென்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் துரதிர்ஷ்டவசமாக பிவி.சிந்து காயம் காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது. அதனால் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் மீதும், ஆடவர் பிரிவில் லஷ்ய சென், கிடம்பி ஸ்ரீகாந்த் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் துரதிர்ஷ்டவசமாக பிவி.சிந்து காயம் காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது. அதனால் மகளிர் பிரிவில் சாய்னா நெவால் மீதும், ஆடவர் பிரிவில் லஷ்ய சென், கிடம்பி ஸ்ரீகாந்த் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. மதிப்புமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையரில் தங்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. அவர் 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார். 21 வயதான லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ்- கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொள்கிறார்.

    எச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு இந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரான ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகிய இந்தியர்களும் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர். பிரனாய் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், ஸ்ரீகாந்த், நிகாத் நிகயேனையும்(அயர்லாந்து), சாய் பிரனீத், சோவ் டைன் சென்னையும் (சீனதைபே) சந்திக்கிறார்கள்.

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், இந்திய அணி:

    ஆடவர் ஒற்றையர்: கிடாம்பி ஸ்ரீகாந்த், லஷ்ய சென், பிரணாய், சாய் பிரணீத்

    மகளிர் ஒற்றையர்: சாய்னா நெவால், மால்விகா பான்சோத்

    ஆடவர் இரட்டையர் பிரிவு: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-அர்ஜுன் எம்ஆர், மனு அட்ரி-சுமீத் ரெட்டி, கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட்

    பெண்கள் இரட்டையர் பிரிவு: ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, பூஜா தண்டு-சஞ்சனா சந்தோஷ், அஷ்வினி பட்-ஷிகா கவுதம்.

    கலப்பு இரட்டையர் பிரிவு: வெங்கட் கவுரவ் பிரசாத்-ஜூஹி தேவாங்கன், இஷான் பட்நாகர்-தனிஷா கிராஸ்டோ.

    போட்டி அட்டவணை:

    ஆகஸ்ட் 22-23 - முதல் சுற்றுப் போட்டிகள்

    24 ஆகஸ்ட் - 2வது சுற்று

    25 ஆகஸ்ட் - 3வது சுற்று

    26 ஆகஸ்ட் - காலிறுதி

    27 ஆகஸ்ட்- அரையிறுதி

    28 ஆகஸ்ட் - இறுதி

    எந்தத் தொலைக்காட்சியில் லைவ் ஆக பார்க்கலாம்?

    அனைத்து போட்டிகளையும் நேரலையாக ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம்.

    லைவ் ஸ்டீமிங்கை ஓடிடி பிளாட்பார்ம் ஆன Voot-இலும் நேரலையாகப் பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: World Badminton Championship

    அடுத்த செய்தி