Copa America 2021: கொலம்பியாவின் நம்ப முடியாத அபார முதல் கோல் வீண்: த்ரில் ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய கோலால் பிரேசில் வெற்றி

வெற்றிக் குதூகலத்தில் பிரேசில்

ரியோ டி ஜெனிரீயோவில் இந்திய நேரம் இன்று அதிகாலை நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்தாட்டத்தில் கொலம்பியா அணியை பிரேசில் அணி சர்ச்சைக்குரிய முறையில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

  • Share this:
முதல் கோலை கொலம்பிய வீரர் லூயிஸ் டயஸ் 10வது நிமிடத்தில் அடித்தார், அந்த கோல் நம்ப முடியாத ஒரு அபாரமான கோல், தென் அமெரிக்கக் கால்பந்துக்கும் ஐரோப்பிய கால்பந்துக்கும் உள்ள வித்தியாசமே இதுதான். ஒரு அசவுகரியமான உயரத்தில் வந்த பந்தை பின்புறம் டைவ் அடித்து படுக்கைவசமான லூயிஸ் டயஸ் இருகால்களையும் பக்கவாட்டில் தூக்கி கோலுக்குள் திணித்த பொது அந்தரத்தில் இருந்தார். இந்த தனிமனித கற்பனை வளம் படைப்பூக்க கால்பந்தாட்டம் ஐரோப்பிய கால்பந்தில் பார்க்க முடியாதது.

கடந்த 8 ஆட்டங்களில் பிரேசில் முதல் கோலை தங்களுக்கு எதிராக வாங்கியதில்லை. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யுவான் குவாட்ராடோ வலது புறத்திலிருந்து கிராஸ் ஒன்றை களத்துக்குள் அடித்தார். கோல் அருகே அங்கு கொலம்பிய வீரர் லூயிஸ் டயஸ் அப்படியே ஒரு பின்புற டைவ் அடித்து ஒரு கட்டத்தில் அந்தரத்தில் படுக்கை வசமாக இருந்த நிலையில் காற்றில் இருந்த பந்தை உதைத்து கோலாக்கினார், ஆச்சரியகரமான கோலினால் பிரேசில் ஆடிப்போனது.

அதன் பிறகு பிரேசில் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது கொலம்பிய பகுதிக்குள் தங்கள் இஷ்டத்துக்கு ஊடுருவியது நெய்மாரின் அற்புத ஆட்டத்தில் கொலம்பிய பாக்சுக்குள் பிரேசில் மோதியது.

இப்படியே போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் இடைவேளைக்குப் பிறகும் கொலம்பியா 78வது நிமிடம் வரை முன்னிலையில்தான் இருந்தது. எப்படியோ அதுவரை பிரேசிலின் அபாரமான மூவ்களை கோலாகாமல் தடுத்தது. பிரேசில் தாக்குதல் ஆட்டத்தில் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்து வந்த போது நெய்மாரின் பாஸ் ஒன்றை தெரியாமல் நடுவர் நெஸ்டர் பிட்டானா தடுத்து விட்டார். அப்போது நடுவர் ட்ராப் பால் கொடுத்திருக்க வேண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அர்ஜெண்டினா நடுவரான இவர் ஆட்டம் தொடர அனுமதித்தார். கொலம்பிய வீரர்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு தொடங்கப்படும் என்று நம்பி சோடை போயினர். ஆனால் சர்ச்சைக்குரிய விதத்தில் அப்படியே தொடர அனுமதிக்கப்பட பிரேசில் வீரர் லூகாச் பகெட்டா பந்தை லெஃப்ட் பேக் வீரர் ரெனான் லோதியிடம் அடித்தார், இவர் இடது ஓரத்திலிருந்து அடித்த கிராஸ் அருமையாக வர ராபர்ட் பெர்மினோ தலையால் முட்டினார், பந்து கோல் கீப்பர் கையில் பட்டு நழுவி கோலுக்குள் சென்றது 1-1 என்று சமன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இது சர்ச்சைக்குரிய கோல் ஆகும். இதில் கொலம்பியாவின் ஆட்டம் உறுதி குலைந்தது, மேலும் பிரேசில் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கொலம்பிய கோல் பக்கம் வந்து நெருக்கடி அளிக்க ஒரு தருணத்தில் நெய்மாருக்கு கார்னர் கிடைக்க காஸ்மிரோ கோலாக மாற்றி பிரேசிலுக்கு 2-1 என்ற வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்த குரூப்பில் பிரேசில் 3 போட்டிகள் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளுடன் டாப்-ல் உள்ளனர். 4 போட்டிகளி கொலம்பியா 4 புள்ளிகள் பெற்றுள்ளனர். பெரூ அணியும் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஈக்வடார் 3 புள்ளிகளையும் வெனிசூலா 2 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
Published by:Muthukumar
First published: