Home /News /sports /

கொரோனா பாதித்த பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ இப்போது எப்படி இருக்கிறார்?

கொரோனா பாதித்த பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோ இப்போது எப்படி இருக்கிறார்?

ரொனால்டோ

ரொனால்டோ

உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் மிதமான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் மிதமான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும், உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான 45 வயது முன்னாள் முன்கள வீரரான ரொனால்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதனை அடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார். இதனை ரொனால்டோ முதல்முறையாக தொழில்முறை வீரராக களம் கண்ட பிரேசிலை சேர்ந்த குருஜிரோ கிளப் நிர்வாகம் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

    லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா பாசிட்டிவ்வை அடுத்து முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோவையும் கொரோனா தொற்றியது. 45 வயதாகும் ரொனால்டோ பிரேசில் கால்பந்து கிளப் குருசெய்ரொ கால்பந்து கிளப்பில் 45% பங்குகளை வாங்கியுள்ளார். இந்த கிளப்புக்கு 101 ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது, இதன் விழாவில் ரொனால்டோ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    “ரொனால்டோவுக்கு மிதமான கொரோனா அறிகுறிகள்தான் தென்படுகின்றன, தேறி வருகிறார்” என்றார். ரொனால்டோ பிரேசில் அணி 2002-ல் உலகக்கோப்பையை வென்ற போது பெரிய ஸ்டார். 3 முறை ஃபீபா உலகின் சிறந்த கால்பந்து வீரராக பரிசு பெற்றவர் ரொனால்டோ. இவர் சைல்ட் பிராடிஜி, அதாவது 16 வயதிலேயே கால்பந்து கிளப்புக்குள் நுழைந்து விட்டார்.

    இதையும் படிங்க: நான் இல்லாமல் இந்தியா ஜெயித்து விடுமா? - கோலி உட்கார்ந்ததன் பின்னணி கூச்சல்கள்

    இதையும் படிங்க: அஸ்வினின் எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ், ராகுல் அரைசதத்தினால் பிழைத்த இந்தியா

    58 மேட்ச்களில் 56 கோல்களை பெலோ ஹரிசாண்ட் கிளப்புக்கு அடித்தார் அதன் பிறகே பிஎஸ்வி ஐந்தோவன், பார்சிலோனா, இண்டர்மிலன், ரியால் மேட்ரிட், ஏசிமிலன், என்று ஐரோப்பியக் கால்பந்தில் கலக்கியவர் ரொனால்டோ.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Football

    அடுத்த செய்தி