முகப்பு /செய்தி /விளையாட்டு / கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் நெய்மர்… இன்ஸ்டா பதிவு வைரல்

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் நெய்மர்… இன்ஸ்டா பதிவு வைரல்

நெய்மர்

நெய்மர்

கேரள ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி காலிறுதியில் குரோஷியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிரேசில் நட்சத்திரம் நெய்மர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு வைரலாகி வருகிறது.

இந்தியாவிலேயே கால்பந்தாட்ட ரசிகர்களை அதிகம் கொண்ட மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. இங்கு பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக தங்களது மனம் கவர்ந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு, கேரள ரசிகர்கள் கட் அவுட்களை அமைத்துள்ளனர். அந்த வகையில் கத்தாரில் நடந்து வரும் கால்பந்தாட்ட போட்டிகள், கேரளாவில் திருவிழாவைப் போல் கொண்டாடப்படுகின்றன.

தந்தையை மிஞ்சிய மகன்.. அறிமுக போட்டியில் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் அர்ஜூன் அசத்தல்

மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் பேனர்களை வைத்து உற்சாகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நெய்மருக்கு கேரளாவின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் கவனம் ஈர்த்துள்ளன.

இவற்றைப் பார்த்து நெகிழ்ந்துபோன நெய்மர், தற்போது கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‘உலகின் பல்வேறு பகுதியில் உள்ள கலைஞர்கள் எங்களை அன்பால் நெகிழச் செய்து விட்டனர். கேரளாவுக்கும் இந்தியாவுக்கும் மிக்க நன்றி’ என்று கூறியுள்ளார்.

நெய்மரின் இந்த இன்ஸ்டா பதிவு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வைரலாகி வருகிறது. கேரள ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி காலிறுதியில் குரோஷியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

IND vs BAN Test: 4ஆம் நாள் ஆட்டம் முடிவு… இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 4 விக். மட்டுமே தேவை…

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. பின்னர் நடந்த பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்த அணி அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது.

top videos

    மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்சிடம் மொராக்கோ அணி தோல்வி அடைந்த நிலையில் நாளை பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகளுக்கிடையே இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    First published:

    Tags: FIFA World Cup 2022, Football