• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உயிர் தப்பிய இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்: உகாண்டாவில் விடுதி அருகே இரட்டைக் குண்டு வெடிப்பு

உயிர் தப்பிய இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்: உகாண்டாவில் விடுதி அருகே இரட்டைக் குண்டு வெடிப்பு

இந்திய மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர்கள்.

இந்திய மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர்கள் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர், இந்த விடுதி அருகே செவ்வாயன்று இரட்டை குண்டு வெடிப்பு ஏற்பட்டு பரபரப்பானது.

    இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன, இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. உகாண்டா மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் உகாண்டா சென்றுள்ளனர். மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் ட்விட்டர் கணக்கில் இந்த குண்டு வெடிப்பின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

    வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்கு 100மீ தொலைவில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு ஏற்பட்டவுடன் தெருக்களில் மக்கள் அலறிப்பிடித்து ஓட்டம் எடுத்தனர், தெருவில் பயங்கர குழப்ப நிலை ஏற்பட்டது என்று இந்திய மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் கவுரவ் கண்ணா தெரிவித்துள்ளார்.

    இந்த அணியில் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்தும் உள்ளார். 15-20 வீரர்கள் விடுதியில் இருந்துள்ளனர். ஆனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நிறைய அப்பாவி மக்கள் இதில் காயமடைந்துள்ளனர். நாடாளுமன்றம் அருகில் உள்ளது, ஒரு காவல் நிலையமும் குண்டுவெடிப்பு இடத்தருகே இருக்கிறது.





    அல்குவைதா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஷாபாப் தீவிரவாதிகளுடன் உகாண்டா ராணுவம் சோமாலியாவில் சண்டையிட்டு வருகிறது, ஆப்பிரிக்க அமைதிப்படையின் அங்கமாக உகாண்டா பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வருகிறது. உகாண்டாவில் இதன் காரணமாக ஷாபா தீவிரவாத அமைப்பு பல பயங்கரமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: