• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு!

பெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு!

பெங்களூருFC கால்பந்தாட்ட அணி

பெங்களூருFC கால்பந்தாட்ட அணி

பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணி மாலத்தீவில் ஈகிள்ஸ் அணியுடன் மே 11ம் தேதி மோதுவதாக இருந்தது.

  • Share this:
மாலத்தீவுகள் சென்றுள்ள பெங்களூரு FC கால்பந்தாட்ட அணியை இந்தியாவிற்கு திரும்புமாறு மாலத்தீவுகள் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் ட்ராஃபி நடத்தப்படுவது போல கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையிலான AFC Cup தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரூப் டி போட்டிகள் மாலத்தீவுகள் நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் இந்த போட்டித்தொடருக்காக பயணத் தடைக்கு மத்தியிலும் சிறப்பு அனுமதி பெற்று சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு FC கால்பந்து அணி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலத்தீவுகள் சென்றடைந்துள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஹோட்டல்களில் வீரர்கள் தனிமையில் தங்கவைக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறார்கள். இதனிடையே கொரோனா விதிமுறைகளை மீறி மாலத்தீவின் மாலே நகரில் பெங்களூரு அணியின் வீரர்கள் சிலர் சாலைகளில் சுற்றித்திரிந்த ஃபோட்டோ பத்ரிகைகளில் வெளியானது.

இதனையடுத்து பெங்களூரு FC கால்பந்துதாட்ட அணி உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என மாலத்தீவு நாட்டின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது மஹ்லுஃப் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது மஹ்லுஃப் காட்டமுடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரு அணி மீறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதால் பெங்களூரு அணி உடனடியாக மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பொதுமக்களின் அழுத்தம் ஏற்பட்ட போதிலும்கூட சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் கொடுத்த உறுதிப்பாட்டை நாங்கள் மதித்தோம்.” என தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இந்த தொடரை மேற்கொண்டு நடத்த முடியாது என்று மாலத்தீவு விளையாட்டு ஆணையத்திடமும் தெரிவித்துவிட்டோம். பெங்களூரு அணியை நாட்டை விட்டு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளோம். மேலும் குரூப் ஸ்டேஜ் போட்டிகளை ரத்து செய்வது குறித்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் பேசி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:    காற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்

பெங்களூரு FC அணியின் உரிமையாளர் பார்த் ஜிந்தால் பெங்களூரு அணிக்காக மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாலேவில் எங்கள் அணியின் 3 வீரர்கள்/ஊழியர்களின் இந்த செயலுக்காக பெங்களூரு அணி சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன். இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எங்களால் AFC Cup தொடர் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போல் இனி ஒருபோதும் நடக்காது” என தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணி மாலத்தீவில் ஈகிள்ஸ் அணியுடன் மே 11ம் தேதி மோதுவதாக இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி குரூப் 4 ஸ்டேஜ் போட்டியில் வரும் மே 15ம் தேதி கொல்கத்தாவின் மோகன் பகான் அணியுடன் மோதுவதாக இருந்தது.

மாலத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சரின் உத்தரவால் கொல்கத்தா அணி மாலத்தீவுகள் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது, .மேலும் அந்த அணியின் வீரர்களான பிரபிர் தாஸ் மற்றும் எஸ்.கே.சாஹில் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: