ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்

கடந்த இரண்டு வாரங்களாகவே உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒலிம்பிக் நாயகன் நட்சத்திர ஹாக்கி வீரர் பல்பீர் சிங் இன்று காலமானார்.

ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்
ஹாக்கி வீரர் பல்பீர் சிங்
  • Share this:
மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் என கடந்த 8-ம் தேதி மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 6.30 மணிக்கு காலமானார்.

95 வயதான பல்பீர் சிங் இந்தியாவிற்காக ஹாக்கி விளையாட்டில்  பல்வேறு சாதனை நிகழ்த்தியுள்ளார். 1948, 52, 56 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பல்பீர் சிங் முக்கிய காரணமாவார்.

மூன்று தங்கம் வென்ற ஹாக்கி வீரர் பல்பீர் சிங்1952 ல் உதவி கேப்டனாகவும், 1956 ல் கேப்டனாகவும் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றவர். 1956 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிராக இந்திய அணி 6-1 என அபார வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.

இதில் ஐந்து கோல்களை பல்பீர் சிங் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார். இதனாலேயே பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். இறுதி ஆட்டத்தில் இவர் அடித்த ஐந்து கோலை இன்று வரை எவராலும் முந்த முடியவில்லை. அவர் மறையும் வரை அந்த சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.

Also see...
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading