உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவின் வெற்றி வீராங்கனை, காமன்வெல்த் தங்கமங்கை பிவி.சிந்து காயம் காரணமாக விலகியுள்ளதால் இன்னொரு நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் அவரது இடத்தை நிரப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் ஆடவர் பிரிவில் கிடம்பி ஸ்ரீகாந்த், லக்ஷ்ய சென், ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. சாய்னா நெவால் சமீப காலங்களில் கடும் காயங்களிலிருந்து மீண்டு வந்ததால் அவர் பழைய பிரகாசத்துக்கு திரும்ப முடியவில்லை, அவர் முன்னால் உலக சாம்பியன் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொள்ள வேண்டும்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது. சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டிக்கு கொஞ்சம் எளிதான சுற்று கிடைத்துள்ளது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், இந்திய அணி:
ஆடவர் ஒற்றையர்: கிடாம்பி ஸ்ரீகாந்த், லஷ்ய சென், பிரணாய், சாய் பிரணீத்
மகளிர் ஒற்றையர்: சாய்னா நெவால், மால்விகா பான்சோத்
ஆடவர் இரட்டையர் பிரிவு: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-அர்ஜுன் எம்ஆர், மனு அட்ரி-சுமீத் ரெட்டி, கிருஷ்ண பிரசாத்-விஷ்ணுவர்தன் கவுட்
பெண்கள் இரட்டையர் பிரிவு: ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, பூஜா தண்டு-சஞ்சனா சந்தோஷ், அஷ்வினி பட்-ஷிகா கவுதம்.
கலப்பு இரட்டையர் பிரிவு: வெங்கட் கவுரவ் பிரசாத்-ஜூஹி தேவாங்கன், இஷான் பட்நாகர்-தனிஷா கிராஸ்டோ.
போட்டி அட்டவணை:
ஆகஸ்ட் 22-23 - முதல் சுற்றுப் போட்டிகள்
24 ஆகஸ்ட் - 2வது சுற்று
25 ஆகஸ்ட் - 3வது சுற்று
26 ஆகஸ்ட் - காலிறுதி
27 ஆகஸ்ட்- அரையிறுதி
28 ஆகஸ்ட் - இறுதி
எந்தத் தொலைக்காட்சியில் லைவ் ஆக பார்க்கலாம்?
அனைத்து போட்டிகளையும் நேரலையாக ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம்.
லைவ் ஸ்டீமிங்கை ஓடிடி பிளாட்பார்ம் ஆன Voot-இலும் நேரலையாகப் பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: P.V.Sindhu, Saina Nehwal, World Badminton Championship