Home /News /sports /

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய் பிரணீத் தோல்வி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய் பிரணீத் தோல்வி

சாய் பிரணீத்

சாய் பிரணீத்

டோக்கியோவில் இன்று தொடங்கிய உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், தைவானின் சூவ் டியென் சென்னை இன்று எதிர்கொண்டார். ஆனால் முதல் சுற்றில் சாய் பிரனீத் தைவானின் சூவ் டியென் சென்னிடம் தோல்வியடைந்தார்.அவர் 21-15, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    டோக்கியோவில் இன்று தொடங்கிய உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், தைவானின் சூவ் டியென் சென்னை இன்று எதிர்கொண்டார். ஆனால் முதல் சுற்றில் சாய் பிரனீத் தைவானின் சூவ் டியென் சென்னிடம் தோல்வியடைந்தார்.அவர் 21-15, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    இப்போதைக்கு காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையரில் தங்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. அவர் 2021-ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலம் வென்றார்.



    21 வயதான லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ்- கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொள்கிறார். இதே போல் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு இந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவரான ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகிய இந்திய வீரர்களும் கவனிக்கத்தக்க வீரர்களாக உள்ளனர்.

    இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: World Badminton Championship

    அடுத்த செய்தி