Home /News /sports /

கொரியா ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

கொரியா ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய முன்னணி ஷட்லர்களான பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தொடக்கச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறினர்.

    கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய முன்னணி ஷட்லர்களான பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தொடக்கச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறினர்.

    தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்ம ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய கொரிய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான ,லக்ஷயா சென், எச்.எஸ். பிரணாய், கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி .வி சிந்து ,அமெரிக்காவின் லாரன் லாம் மோதினர் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15 ,21-14 செட் கணக்கில் பி.வி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில், பால்மா ஸ்டேடியத்தில் மலேசியாவின் டேரன் லியூவை 22-20 21-11 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார். சமீபத்தில் சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்ற மூன்றாம் நிலை வீராங்கனையான சிந்து, அடுத்ததாக ஜப்பானின் அயா ஓஹோரியை சந்திக்கிறார், அதே நேரத்தில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐந்தாவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் மிஷா சில்பர்மேனை எதிர்கொள்கிறார்.

    எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஆகியோர் கொரியாவின் பா டா கிம் மற்றும் ஹீ யங் பார்க் ஆகியோரிடம் இருந்து வாக் ஓவர் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    இந்திய ஜோடி அடுத்ததாக இரண்டாவது தரவரிசையில் உள்ள இந்தோனேசிய ஜோடியான முகமது அஹ்சன் மற்றும் ஹென்ட்ரா செட்டியவான் ஜோடியை எதிர்கொள்கிறது.

    செவ்வாயன்று, உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற லக்ஷ்யா சென் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மாளவிகா பன்சோட் மூன்று கேம்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Badminton, PV Sindhu

    அடுத்த செய்தி