உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

World Badminton Championship 2019 | PV Sindhu | போட்டி தொடங்கியது முதலே ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, புள்ளிகளை குவித்த வண்ணம் இருந்தார்.

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!
பி.வி.சிந்து
  • Share this:
உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இரண்டு முறை தவறவிட்ட தங்கத்தை, இம்முறை தனது வென்றெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். இதன், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், தரநிலையில் ஐந்தாவது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, 4-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுஃபேவுடன் (Chen Yufei) மோதினார்.

போட்டி தொடங்கியது முதலே ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, புள்ளிகளை குவித்த வண்ணம் இருந்தார். அத்துடன், மிகவும் நிதானமாக ஆடியதால் இவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீன வீராங்கனை தடுமாறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-க்கு -7, 21 க்கு14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய போதும் இரண்டாவது இடமே பிடித்து சிந்து ஏமாற்றம் அளித்தார். தற்போது, மூன்றாவது முறையாக இறுதிக்குள் தடம் பதித்துள்ள சிந்து, தங்கப் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தரநிலையில் 16-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய் பிரனீத், நடப்புச் சாம்பியனான ஜப்பானின் கென்டோ மொமோட்டா-வுடன் (Kento Momota) மோதினார். இதில், நம்பர் ஒன் வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதிக்கம் செலுத்திய மொமோட்டா 21-க்கு 13, 21-க்கு 8 நேர்செட்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலகச் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால், சாய் பிரனீத் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

Also Watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...