Home /News /sports /

வெற்றி பெற்ற வீரர்களை அழைத்து பிரதமர் பாராட்டுவது இந்தியாவில்தான் சாத்தியம்- தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

வெற்றி பெற்ற வீரர்களை அழைத்து பிரதமர் பாராட்டுவது இந்தியாவில்தான் சாத்தியம்- தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தாமஸ் கோப்பை பேமிண்டன் வெற்றி வீரர்களை அழைத்து பிரதமர் பாராட்டுவது இந்தியாவில்தான் சாத்தியம் என்று தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி பிரதமர் மோடியின் பாராட்டு குறித்து நெகிழ்ச்சி ததும்ப கூறியுள்ளார்.

    தாமஸ் கோப்பை பேமிண்டன் வெற்றி வீரர்களை அழைத்து பிரதமர் பாராட்டுவது இந்தியாவில்தான் சாத்தியம் என்று தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி பிரதமர் மோடியின் பாராட்டு குறித்து நெகிழ்ச்சி ததும்ப கூறியுள்ளார்.

    தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது, இதனையடுத்து மே-15ம் தேதி இந்திய விளையாட்டு வரலாற்றில் குறிப்பாக பேட்மிண்டன் வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னால் எழுதப்பட வேண்டிய பொன்னாள் ஆனது.வெற்றி ஹீரோக்களை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தார்.

    73 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அணி தாமஸ் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை, அதுவும் 14 முறை சாம்பியன்களான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தச் சாதனையை புரிந்துள்ளது இந்திய அணி. இதனை கவாஸ்கர், பல்வீந்தர் சிங் சாந்து போன்ற முன்னாள் வீரர்கள் 1983 உலகக்கோப்பை வென்ற தருணம் இந்திய விளையாட்டுக்கு கிடைத்த பெரும்பேறு என்று கொண்டாடினர்.

    இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் அணியின் அனைத்து வீரர்களையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இது குறித்து இந்திய பேட்மிண்டன் ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த இரட்டையர் பிரிவு வீரரான ஷிராக் ஷெட்டி பெருமிதத்துடன் கூறும்போது, “ஒரு அணி வெற்றி பெற்றதும் வெற்றிக்கு பிறகு பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்தது இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது .

    இது எங்களை ஊக்கப்படுத்தி புதிய நிலைக்கு கொண்டுசென்றது. பிரதமர் தனது எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என தெரிவித்தார்.

    இந்திய ஆடவர் ஹாக்கி வீரர்கள் உட்பட பலரும் இந்திய பேட்மிண்டன் அணியின் வரலாற்றுச் சாதனையை பாராட்டி வருகின்றனர், உலகெங்கிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Badminton, Modi, PM Modi, Prime Minister Narendra Modi

    அடுத்த செய்தி