முகப்பு /செய்தி /விளையாட்டு / அவனி லெகாரா உலக சாதனையுடன் தங்கம் - பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் அசத்தல்

அவனி லெகாரா உலக சாதனையுடன் தங்கம் - பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் அசத்தல்

அவனி லெகாரா தங்கம் வென்றார்.

அவனி லெகாரா தங்கம் வென்றார்.

பிரான்சில் நடைபெறும் உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனை லெகாரா உலக சாதனை படைத்ததோடு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

  • Last Updated :

பிரான்சில் நடைபெறும் உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனை லெகாரா உலக சாதனை படைத்ததோடு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதில் இந்தியா சார்பில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை அவனி லெகாரா உலகக்கோப்பையில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் பிரமாதமாக ஆடினார். தனது கடைசி 24வது ஷாட் முடிவில் 250.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதற்கு முன்பாக டோக்கியோ பாராலிம்பிக்கில் 249.6 புள்ளிகள் பெற்று அப்போதைய உலக சாதனையை சமன் செய்தார், ஆனால் அதை இப்போது முறியடித்து விட்டார். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா, ஸ்வீடன் வீராங்கனை அன்னா நார்மன் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.

இதன் மூலம் அவனை லெகாரா 2024-ல் பாரீசில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.

ஆரம்பத்தில் விசா மறுக்கப்பட்டதால், போட்டியை இழக்கும் தருவாயில் இருந்த அவனி லெகாரா இப்போது மூன்று நாட்களுக்குப் பிறகு தங்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் SH1 பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் லெகாரா தங்கம் வென்றார். பெண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் SH1 நிகழ்வில் அவர் வெண்கலமும் வென்று பாராலிம்பிக்ஸில் ஒன்றிற்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

First published:

Tags: Tokyo Paralympics