முகப்பு /செய்தி /விளையாட்டு / Australian Open 2022| ஆஸ்திரேலிய ஓபன் தான் முக்கியம் ஜோகோவிச் அல்ல- நடால் கோபம்

Australian Open 2022| ஆஸ்திரேலிய ஓபன் தான் முக்கியம் ஜோகோவிச் அல்ல- நடால் கோபம்

நடால்-ஜோகோவிச்

நடால்-ஜோகோவிச்

கொரோனா தொற்றுடன் தொடர்களில் பங்கேற்றதாக ஜோகோவிச் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு அவருக்கான விசாவை ரத்து செய்ய இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்தது. அவரை பொது ஒழுங்குக்கு அபாயம் விளைவிப்பவர் என்று ஆஸ்திரேலிய அரசு முத்திரை குத்தியது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆஸ்திரெலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் என்பது மிக முக்கியமானது என்று ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

சேர்பிய நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் ‘ஆஸ்திரேலிய ஓபன் என்பது ஒரு தனிப்பட்ட வீரரை விட முக்கியமானது’என்று ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

திங்களன்று ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. “ஆஸ்திரேலிய ஓபன் ஜோகோவிச் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு கிரேட் டோர்னமெண்ட்” என்றார் நடால்.

கொரோனா தொற்றுடன் நிகழ்ச்சிகளில்பங்கேற்றதாக ஜோகோவிச் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு அவருக்கான விசாவை ரத்து செய்ய இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்தது. அவரை பொது ஒழுங்குக்கு அபாயம் விளைவிப்பவர் என்று ஆஸ்திரேலிய அரசு முத்திரை குத்தியது.

வாக்சின் போட்டுக்கொள்ளாத ஜோகோவிச்சை அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அரசு தீவிரமாக உள்ளது. இதில் கலந்து கொண்டு வென்றால் 21வது பட்டம் வென்று சாதனை புரிந்தவர் ஆவார் ஜோகோவிச். அதாவது யாரும் செய்யாத சாதனை இது.

top videos

    இந்நிலையில் நடால், “ஜோகோவிச்சை ஒரு விளையாட்டு வீரராக மதிக்கிறேன். ஆனால் கடந்த 2 வாரங்களாக அவர் செய்த காரியத்தை மதிக்க முடியாது. இந்த சர்ச்சை கொஞ்சம் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு நீளமாகச் சென்றுள்ளது. இந்தச் சூழ்நிலையே சோர்வூட்டக்கூடியதாக இருக்கிறது. நாம் டென்னிஸ் பற்றி பேச வேண்டும், என்று நினைக்கிறேன், தனிமனிதனை விட விளையாட்டு பெரியது, ஜோகோவிச்சை விட ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பெரியது” என்றார் நடால்.

    First published:

    Tags: Novak Djokovic, Rafael Nadal, Tennis