ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சானியா – போபன்னா இணை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சானியா – போபன்னா இணை

சானியா - ரோஹன் போபன்னா

சானியா - ரோஹன் போபன்னா

சானியா மிர்சா – ரோஹன் போபன்னா இணை டைட்டிலை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபன்னா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குபஸ்கி இணையை 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வென்றது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிப் போட்டி மெல்போர்ன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அரையிறுதியில் விளையாடுவதற்கு இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபன்னா இணையும் அமெரிக்கா – பிரிட்டிஷ் இணையான டெசிரே க்ராவ்சிக் – நீல் ஸ்குபஸ்கியும் தகுதி பெற்றனர்.

இரு இணைகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடியதால் விறுவிறுப்பு அதிகரித்தது. 1 மணி நேரம் 52 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இந்திய இணை 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றிக்கு பின்னர் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது- இன்று நடந்தது அற்புதமான மேட்ச். நான் சற்று பதற்றத்துடன் ஆட்டத்தை எதிர்கொண்டேன். இது என்னுடைய கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி என்பதால் எனக்கு இந்த ஆட்டம் சிறப்பு நிறைந்தது. நான் 14 வயது இருக்கும்போதே ரோஹன் போபன்னாவுடன் இணைந்து விளையாடி வருகிறேன். இன்றைக்கு எனக்கு 36 வயது. அவருக்கு 42 வயது ஆகிறது. இன்றைக்கும் நாங்கள் விளையாடுகிறோம். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னாக நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் லத்வியன் – ஸ்பெயின் இணைகளான ஜெலினா ஆஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வெகா ஹெர்னாண்டஸை இந்திய இணை வெளியேற்றியது. இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை 28ஆம் தேதி நடைபெறுகிறது. சானியா மிர்சா – ரோஹன் போபன்னா இணை டைட்டிலை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Sania Mirza, Tennis