முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹிஜிகடா, குப்லெர் இணை சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹிஜிகடா, குப்லெர் இணை சாம்பியன்

வெற்றிக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய இணை.

வெற்றிக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய இணை.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலெங்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான பட்டத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடா மற்றும் ஜேசன் குப்லெர் இணை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலெங்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.  மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபெகினாவுடன், சபலெங்கா மோதினார். முதல் செட்டை 6க்கு4 என ரைலெனாவும், இரண்டாவது செட்டை 6-க்கு 3 என சபலெங்காவும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணையிக்கும் 3-வது செட்டில் 6-க்கு 4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார் சபலெங்கா.

இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா – ஜேசன் குப்லெர் இணை மொனாக்கோவின் ஹியூகோ நைஸ் மற்றும் போலந்து நாட்டின் ஜான் ஜெலன்ஸ்கி இணையுடன் மோதியது. இந்த போட்டியில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ஹியூகோ – ஜான் ஜெலன்ஸ்கியை வீழ்த்தி ஆஸ்திரேலிய இணையான ரிங்கி – குப்லெர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். உள்ளூரில் நடைபெற்றதால் ஆஸ்திரேலிய இணைக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. ரசிகர்களின் பலத்த கரவொலிக்கு மத்தியில் இந்த ஆட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதியாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். ஜோகோவிக்கிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்த போட்டியில் அவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் உள்ளனர்.

First published:

Tags: Tennis