ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் எஸ் ராயவரம் மண்டலத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது செவ்வெட்டி ஜோசித் சத்ரபதி என்ர சிறுவன் பெரியவர்களே அஞ்சும் குதிரை சவாரி செய்து, தனது மன உறுதியால் ஆந்திர மாநிலத்தையே கலக்கி வருகிறார்.தைரியமான எல்.கே.ஜி மாணவனான ஜோசித் சத்ரபதி தனது ஆர்வமான குதிரை சவாரியைச் செய்து , பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.
அதிசய குழந்தை ஜோசித் சத்ரபதியின் தந்தை நாகேந்திரா என்பவர் ஸ்ரீ வேதா டிஃபென்ஸ் அகாடமி இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார், அங்கு அவர் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பம் செய்தவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாணவனின் தாயார் சாய் தேஜ்ஸ்வனி ஒரு இல்லத்தரசி ஆவார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன பிளாக்பஸ்டர் படம் ‘RRR’-ல் நடித்த ராம்சரணின் மகதீரா படத்தைப் பார்த்து தன் குதிரைச் சவாரி விருப்பத்தை வளர்த்துக் கொண்டார் செவ்வேட்டி ஜோசித் சத்ரபதி. சாப்பிடும் போது, விளையாடும்போது, படுக்கைக்குச் செல்லும் போது என்று மகதீரா படம் இவருடனேயே பயணித்திருக்கிறது.
ஜோசித் தனது பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்றபோது குதிரையில் ஏறி சவாரி செய்யும் ஆசை முதன் முதலில் வந்துள்ளது. ஜோசித் தனது பெற்றோரிடம் தான் குதிரை சவாரி செய்ய அனுமதி பெற்றார். அன்றிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மிகுந்த நம்பிக்கையுடன் குதிரையில் சவாரி செய்வது வழக்கம். குதிரையேற்றத்தில் ஜோசித்தின் ஆர்வத்தைக் கண்டறிந்த பிறகு அவரது பெற்றோர் அவரை ஒரு வருடத்திற்கு முன்பு குதிரை சவாரி பயிற்சியில் சேர்த்தனர்.
இப்போது, ஜோசித் ஒரு தொழில்முறை குதிரை சவாரியாளன் போல குதிரை சவாரி செய்கிறார். குதிரை சவாரி மீதான அவரது விடாமுயற்சியும் பொறுமையும் அவரை மணிக்கு 50- 60 கிமீ வேகத்தில் குதிரை சவாரி செய்ய வைத்துள்ளது. ஜோசித்தின் தைரியமான குதிரைசவாரி திறமை பெற்றோரை பெருமைப்படுத்துகிறது. ஜோசித் தந்தையைத் தொடர்பு கொண்டபோது, நிபுணத்துவம் பெற்ற தொழில்முறை குதிரை சவாரி செய்பவராக ஜோசித்தை உருவாக்குவோம் என்றார்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.