ஆசிய டிராக் சாம்பியன்ஷிப்பின் இறுதி நாளான புதன்கிழமை சீனியர் பிரிவின் ஸ்பிரிண்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம், இந்திய சைக்கிள் வீரர் ரொனால்டோ சிங் தனது வாழ்நாளின் சாதனை ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
சாம்பியன்ஷிப்பில் இது அவரது மூன்றாவது பதக்கம். முன்னதாக 1 கிமீ டைம் ட்ரையல் மற்றும் டீம் ஸ்பிரிண்ட் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.
ரொனால்டோ சிங் நேற்று ஜப்பானின் அனுபவம் வாய்ந்த ரைடர் கென்டோ யமசாகிக்கு கடுமையான சவால் கொடுத்தார், ஆனால் வெள்ளிப் பதக்கமே வெல்ல முடிந்தது.யமசாகி ரொனால்டோவை அடுத்தடுத்த பந்தயங்களி தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இப்போட்டியில் கஜகஸ்தானின் ஆண்ட்ரே சுகே வெண்கலம் வென்றார். காலையில், ரொனால்டோ சிங் அரையிறுதியில் கஜகஸ்தானின் ஆண்ட்ரே சுகேயை தோற்கடித்தார்.
ரொனால்டோ சிங் முதல் பந்தயத்தில் தோல்வியடைந்தார், ஆனால் அடுத்த இரண்டிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய ஜூனியர் சைக்கிள் வீரர் பிர்ஜித் யும்னம் 15 கிமீ பாயிண்ட்ஸ் பந்தயத்தில் 23 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். கொரியாவின் சுங்கியோன் லீ 24 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தானின் ஃபரூக் போபோஷெரோவ் தங்கப் பதக்கமும் வென்றனர்.
10 கிலோமீட்டர் பெண்கள் ஸ்கிராட்ச் ரேஸ் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் ரினாட்டா சுல்தானோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற 19 வயதான இந்திய வீராங்கனை சயானிகா கோகோய், அன்றைய பெரிய ஆச்சரியத்தை நிகழ்த்தினார். யுரி கிம் தங்கப் பதக்கத்தையும், ஜப்பானின் கீ ஃபுருயாமா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் போட்டியில் இந்திய அணி 23 பதக்கங்களுடன் (2 தங்கம், 6 வெள்ளி, 15 வெண்கலம்) ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
கொரியா 12 தங்கம், 14 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கஜகஸ்தான் நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஜப்பான் 18 தங்கம், 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cycling