Home /News /sports /

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-0-வுக்குப் பிறகு வெற்றியை நழுவ விட்ட இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-0-வுக்குப் பிறகு வெற்றியை நழுவ விட்ட இந்தியா

தென் கொரியாவுடன் டிரா செய்த இந்தியா.

தென் கொரியாவுடன் டிரா செய்த இந்தியா.

5 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தென் கொரியாவுடன் 2-2 என்று டிரா செய்தது. ஒருகட்டத்தில் 2-0 என்று முன்னிலை பெற்ற இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்தது.

மேலும் படிக்கவும் ...
    5 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தென் கொரியாவுடன் 2-2 என்று டிரா செய்தது. ஒருகட்டத்தில் 2-0 என்று முன்னிலை பெற்ற இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்தது.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் உபாத்யாய் முதல் கோல் அடித்து அசத்தினார். 18-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால் தென்கொரியா அணி பதில் கோல் திருப்ப தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அந்த அணியினர் பல முறை இந்திய அணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். 41-வது நிமிடத்தில் தென்கொரியாவின் ஜோங்யுன் ஜாங்கும், 46-வது நிமிடத்தில் சுங்யுன் கிம்மும் கோல் வலைக்குள் பந்தை திணித்து சமநிலையை ஏற்படுத்தினர்.

    பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பு உட்பட பல கோல் வாய்ப்புகளை இந்திய அணி தவற விட்டது. தென் கொரியா கோல் கீப்பர் ஜாக்யேன் கிம் பயங்கரமாக கோல் கீப்பிங் செய்து இந்திய முயற்சிகளை முறியடித்தார், முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பிறகு மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரை வென்று நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் ஆட்டத்திலேயே கோட்டை விட்டது இந்திய அணி.

    இன்று நடைபெறும் இன்னொரு ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை மாலை 3.30 மணிக்குச் சந்திக்கிறது. நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் மோதின இந்த லீக் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியப் போட்டிகள்:

    டிச. 15, புதன் : இந்தியா vs பங்களாதேஷ் – 3:00 PM IST

    டிச. 17, வெள்ளி : இந்தியா - பாகிஸ்தான் – 3:00 PM IST

    டிச. 18, சனிக்கிழமை : இந்தியா- மலேசியா – 3:00 PM IST

    டிச 19, ஞாயிறு: இந்தியா-ஜப்பான் – 3:00 PM IST

    டிச. 21, செவ்வாய்: அரையிறுதி மற்றும் 5-6ம் இடங்களுக்கான பிளே ஆஃப் – 3:00 PM IST

    டிச. 22, புதன்: இறுதிப் போட்டி மற்றும் 3 மற்றும் 4ம் இடங்களுக்கான பிளே ஆஃப் போட்டி – 5:30 PM IST

    இதையும் படிங்க: டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் விலகுவதும் ஒருநாள் தொடரிலிருந்து கோலி விலகுவதும் சரியாகப் படவில்லையே- அசார் சந்தேகம்
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia championship hockey, Asian Champions Trophy Hockey

    அடுத்த செய்தி