வங்கதேசத்தில் நடைபெறும்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் நேற்று ஜப்பானிடம் இந்திய அணி 3-5 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது.
இறுதிப் போட்டிக்கு ஜப்பான் முன்னேறியது, இதே ஜப்பான் அணியை லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் 6-0 என்று தோற்கடித்தது இந்திய அணி, ஆனால் நேற்று ஜப்பான் அணி பேயாட்டம் ஆடினர், இந்திய அணியை துவம்சம் செய்ய கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியதோடு 6 கோல்கள் வாங்கியது அவர்கள் மனதை எந்த அளவுக்கு புண்படுத்தியது என்பது இந்த வெற்றி ஆட்டத்தில் தெரிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் த்ரில்லிங்கான ஒரு பரபரப்பு போட்டியில் தென் கொரியா அணி பாகிஸ்தானை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது, ஆகவே தென் கொரியா-ஜப்பான் அணிகள் இறுதியில் மோதுகின்றன.
இந்திய ஆக்கி அணி எளிதில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நேற்று ஜப்பான் அணி 6 கோல்கள் வாங்கிய அணியா என்று வியக்கும் அளவுக்கு இந்திய பாதுகாப்பு அரணை கேலிக்கூத்தாக்கியது. டிபன்ஸ் வலுவாக இருந்த இந்திய அணியை நிலைகுலையச் செய்த ஜப்பான் தொடர்ந்து டி சர்க்கிளுக்குள் புகுந்து அட்டாக் செய்தது. முதல் 2 நிமிடங்களிலேயெ ஜப்பான் 2-0 என்று முன்னிலை பெற்றது. இதில் அதிர்ச்சியடைந்த இந்திய அணி பிறகு ஜப்பானைப் பிடிக்கும் முயற்சியைத்தான் மேற்கொள்ள வேண்டி வந்தது. ஷாட் யமாடா முதல் கோலை பெனால்டி கார்னரில் அடித்தார்.
ரைகி பியூஜிஷிமா 2வது நிமிடத்திலும் யோஷிகி கிரிஷிடா 29வது நிமிடத்திலும், கோசெய் கவாபே 35வது நிமிடத்திலும் ரியோமா ஊக்கா 41வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க, இந்திய அணியில் ஹர்திக் சிங் 17 மற்றும் 58 வது நிமிடங்களில் கோல்களை அடிக்க ஹர்மன்பிரீத் சிங் 43வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர்.
இதையும் படிங்க: ரவி சாஸ்திரி கூறிய அந்த வார்த்தைகள்: உடைந்து நொறுங்கிய அஸ்வின்
இதற்கு முன்பாக 18 முறை இந்தியாவும் ஜப்பானும் மோதியதில் 16 முறை இந்தியா வென்றுள்ளது. ஒரேயொரு முறைதான் ஜப்பான் வென்றுள்ளது. ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி சட்டென அரையிறுதியில் வெளியேறியது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.