Home /News /sports /

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தான் ஜப்பானிடம் தோற்க வேண்டும், இந்தியா இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களுக்கும் மேல் அடிக்க வேண்டும்- நடக்குமா?

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தான் ஜப்பானிடம் தோற்க வேண்டும், இந்தியா இந்தோனேசியாவுக்கு எதிராக 16 கோல்களுக்கும் மேல் அடிக்க வேண்டும்- நடக்குமா?

இந்திய ஹாக்கி அணி.

இந்திய ஹாக்கி அணி.

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா- இந்தோனேசியா இன்று மோதுகின்றன. பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் கடைசி நேரத்தி பாகிஸ்தான் கோல் அடிக்க 1-1 என்று ட்ரா ஆக, ஜப்பானுடன் அடுத்த போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றது, இந்நிலையில் இன்று இந்தோனேசியா அணியுடன் மோதுகிறது.

மேலும் படிக்கவும் ...
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா- இந்தோனேசியா இன்று மோதுகின்றன. பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் கடைசி நேரத்தி பாகிஸ்தான் கோல் அடிக்க 1-1 என்று ட்ரா ஆக, ஜப்பானுடன் அடுத்த போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றது, இந்நிலையில் இன்று இந்தோனேசியா அணியுடன் மோதுகிறது.

    முதலில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தானை ஜப்பான் வீழ்த்த வேண்டும், பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் உள்ளது, ஜப்பான் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானை ஜப்பான் வீழ்த்தும் பட்சத்தில் ஜப்பான் 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கொடு நாட்டும். பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இந்தோனேசியாவை 13-0 என்று கோல் மழையில் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான்கோல் வித்தியாசம் +13 ஆகும்.

    மாறாக இந்தியாவின் தற்போதைய கோல் வித்தியாசம் ஜப்பானிடம் 5-2 என்று தோற்றதால் மைனஸ் 3-ல் உள்ளது. எனவே இன்று இந்தோனேசியாவை வீழ்த்த இந்தியா 16 கோல்களுக்கும் மேல் அடிக்க வேண்டும்.

    தற்போது ஒரு புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று இந்தோனேசியாவை (மாலை 5 மணி) எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் ஜப்பான் (6 புள்ளி) அணி தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை (4 புள்ளி) வீழ்த்த வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அணிக்கு 2-வது சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

    அனுபவமின்மையே இந்திய அணியின் இந்த நிலைமைக்குக் காரணம்:

    சர்தார் சிங் பயிற்சியின் கீழ் இளம் இந்திய அணியை ஆசியக்கோப்பைக்கு அனுப்பினர். கேப்டன் பிரேந்திர லாக்ரா, எஸ்.வி.சுனில் என்று சீனியர் வீரர்கள் உள்லனர், ஆனால் இவர்கள் தங்கள் உச்சக்காலத்தைக் கடந்து விட்டவர்கள். இளம் வீர்ர்கள் என்றால் கடந்த ஜூனியர் உலகக்கோப்பை இந்திய அணியிலிருந்து சில்ல வீரர்களை சீனியர் அணிக்குத் தேர்வு செய்தனர்.

    இவர்களுக்கு சர்வதேச சீனியர் மட்ட ஹாக்கியின் தரநிலைகளுடன் சரிவர பொருத்திக் கொள்ள முடியவில்லை, பின் தங்கியுள்ளனர். தடுப்பாட்டம், முன்னிலை மற்றும் நடுக்களம் என்று ஜூனியர் வீரர்களிடம் தாக்கத் இல்லை. லாங் பாஸை போட்டு நட்டநடுவிலிருந்து தாக்குதல் முயற்சிக்கின்றனர், இது விரயமான ஒரு மூவ். மாறாக இடது வலது விங்குகளில் வலுவான வீரர்கள் தேவை. ஃபார்வர்டின் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் உத்தம் சிங் சோபிக்கவில்லை.

    பவன் ராஜ்பார் மட்டுமே சிறப்பாக ஆடுகிறார். பெனால்டி கார்னரை கோலாக மாற்றுவதிலும் இளம் வீரர்கள் திணறுகின்றனர், தரமான ட்ராக் பிளிக்கர் இல்லை. காரணம் ருபீந்தர் பால் சிங் மணிக்கட்டு காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதே.

    இந்நிலையில் இன்று ஆசியக் கோப்பையில் இந்தோனேசியாவுடன் மோதுகிறது இந்திய அணி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia championship hockey, Hockey

    அடுத்த செய்தி