Home /News /sports /

ஆசியக்கோப்பை ஹாக்கி: கலக்கிய பவன் ராஜ்பர் - மலேசியாவுடன் இந்தியா த்ரில் ட்ரா

ஆசியக்கோப்பை ஹாக்கி: கலக்கிய பவன் ராஜ்பர் - மலேசியாவுடன் இந்தியா த்ரில் ட்ரா

ஆசியக் கோப்பை ஹாக்கி

ஆசியக் கோப்பை ஹாக்கி

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர்-4-க்கு அசாத்தியமாக நுழைந்த இந்திய அணி ஜப்பானை சூப்பர் 4 சுற்றில் வீழ்த்தி பிறகு மலேசியாவுக்கு எதிராக 3-3 என்று த்ரில் ட்ரா செய்து இறுதிக்கு அருகில் வந்துள்ளது.

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர்-4-க்கு அசாத்தியமாக நுழைந்த இந்திய அணி ஜப்பானை சூப்பர் 4 சுற்றில் வீழ்த்தி பிறகு மலேசியாவுக்கு எதிராக 3-3 என்று த்ரில் ட்ரா செய்து இறுதிக்கு அருகில் வந்துள்ளது.

    மலேசியாவின் ரஜீ ரஹீம் 12, 21, மற்றும் 56வது நிமிடங்களில் பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றி ஹாட்ரிக் அடித்தார். 2 கோல்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி பிரமாதமாக போராடி சவால் அளித்தது, அதில் விஷுகாந்த் சிங் 32வது நிமிடத்திலும். எஸ்.வி.சுனில் 53வது நிமிடத்திலும். நீலம் சஞ்ஜீப் 55வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க் ஆட்டம் சமன் ஆனது.

    சூப்பர் 4 மற்ற ஆட்டங்கள் மற்றும் நிலவரம்:

    தென் கொரியா அணி ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மலேசியாவுக்கு எதிராக தென் கொரியா 2-2 என்று டிரா செய்தது. இந்நிலையில் 5-3 என்ற +2 கோல் வித்தியாசத்தில் கொரியா முதலிடம் வகிக்கிறது. 5-4 என்று +1 கோல் வித்தியாசத்தில் இந்திய அணி 2ம் இடத்தில் உள்ளது.

    இப்போது ஜப்பானுக்கு இறுதி வாய்ப்பு முடிந்து விட்டது. ஆனால் மலேசியா அணி ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், இந்தியா-தென் கொரியா ஆட்டம் டிரா ஆக வேண்டும். அப்படி ஆனால் மலேசியா இறுதிக்குள் நுழையும். இதுதான் இப்போதைய நிலை.

    மலேசியா எப்போதுமே ஒரு வித்தியாசமான அணி எவ்வளவு பெரிய அணியாக எதிரணி இருந்தாலும் கவலைப்படாமல் கடும் பிரஷர் போடுவார்கள். இந்தியாவுக்கும் நேற்று கடும் பிரஷர் போட்டார்கள்.6வது நிமிடத்திலேயே மலேசியா வீரர் முகமது ஹசன் ரிவர்ஸ் ஷாட் அடிக்க இந்திய கோல் கீப்பர் சூரஜ் அற்புதமாகத் தடுத்தார். இதனையடுத்து பெனால்டி கார்னர் கிடைத்தது. இம்முறையும் பைசல் சாரியின் ஹிட்டை சூரஜை கடக்க முடியவில்லை. முதல் 15 நிமிட ஆட்டத்தில் மலேசியா கலக்கியது. இந்தியா ஒரு ஷாட்டை கூட மலேசியாவின் கோல் நோக்கி அடிக்கவில்லை.

    2வது 15 நிமிட ஆட்டத்தில் இந்தியா கொஞ்சம் முன்னேற்றம் காட்டியது, சில வாய்ப்புகளை உருவாக்கியது ஆனால் பினிஷிங் இல்லை. ஆனால் 12வது நிமிடத்தில் மலேசியா பெனால்டி கார்னர் பெற ரஜீ ரஹீம் கோலின் வலது மூலைக்கு அனுப்பினார் மலேசியா 1-0. 21வது நிமிடத்தில் மீண்டும் மலேசியாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரஹீம் 21வது நிமிடத்தில் கோலாக மாற்றினார்.



    2 கோல்கள் வாங்கியவுடன் இந்திய அணி அவசரம் காட்டினர், அப்போதுதான் விஷ்ணுகாந்த் பெனால்டி கார்னர் ஷாட்டின் ரீபவுண்டில் முதல் கோலை அடித்தார். இந்த ஆட்டத்தில் எல்லாம் இந்திய அணியின் பவன் ராஜ்பர் மின்னல் வேகத்தில் ஆடினார், அவரை ஆட்ட நாயகனாக இதற்காகவே தேர்வு செய்தனர். இவரால் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தும் திர்கே அதை விரயம் செய்தார். 53வது நிமிடத்தில் பவன் ராஜ்பரின் அற்புதமான ஆட்டத்தினால் இந்தியா சமன் செய்தது.

    எதிரணி வீரரிடமிருந்து பந்தைத் தட்டிப்பறித்த ராஜ்பர் தன்னலமில்லாமல் அதை சுனிலுக்கு அனுப்பினார். அங்கிருந்து சுனில் அபாரமான கோலை அடித்தார். இதற்கு அடுத்து நீலம் சஞ்ஜீப் பெனால்டி கார்னரை கோலாக்க இந்தியா 3-2 என்று முன்னிலையும் பெற்றது. ஆனால் இந்த முன்னிலை மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, மலேசியாவின் ரஜி ரஹீம் ஹாட்ரிக் கோலை அடித்து சமன் செய்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia championship hockey, India

    அடுத்த செய்தி