ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசியக் கோப்பை ஹாக்கி: ஏகப்பட்ட தவறுகள் செய்த இளம் இந்திய அணி- ஜப்பானிடம் தோல்வி- அடுத்த சுற்றுக்குச் செல்வது கடினம்

ஆசியக் கோப்பை ஹாக்கி: ஏகப்பட்ட தவறுகள் செய்த இளம் இந்திய அணி- ஜப்பானிடம் தோல்வி- அடுத்த சுற்றுக்குச் செல்வது கடினம்

ஆசியக் கோப்பை ஹாக்கி- இந்தியா 2-5 என்று ஜப்பானிடம் தோல்வி

ஆசியக் கோப்பை ஹாக்கி- இந்தியா 2-5 என்று ஜப்பானிடம் தோல்வி

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரில் நேற்று பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்த இந்திய அணி இன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததையடுத்து ஜப்பான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இளம் இந்திய அணியை வீழ்த்தியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரில் நேற்று பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்த இந்திய அணி இன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததையடுத்து ஜப்பான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இளம் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போது அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் - ஜப்பான் போட்டி முடிவை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, இந்தியா-இந்தோனேசியா போட்டியில் இந்தியா கோல் மழை பொழிவது அவசியம்.

4வது மற்றும் இறுதி கால்மணி நேர ஆட்டத்தில் மட்டும் 4 கோல்கள் போடப்பட்டன. ஏனெனில் 3வது கால்மணி நேர ஆட்டத்தில் இந்தியா 1-2 என்று மட்டும்தான் பின் தங்கியிருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் பிரிவு ஏ-வில் 6 புள்ளிகள் பெற்று டாப்பில் உள்ளது. பாகிஸ்தான் 2 போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா 1 புள்ளியுடன் 3ம் இடத்தில் உள்ளது. வியாழனன்று இந்தத் தொடரின் பலவீனமான இந்தோனேசியாவுக்கு எதிராக இந்தியா வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனால் பாகிஸ்தான் -ஜப்பான் போட்டி முடிவே இந்தியா அடுத்த சுற்று முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும்.

4ம் பாதியில் தமிழக வீரர் கார்த்தி செல்வம் ஃபவுல் செய்து மஞ்சள் அட்டை தண்டனை கிடைத்ததால் 5 நிமிடங்களுக்கு அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இவருக்கு எல்லோ கார்டு காண்பிக்கப்பட்டதால் 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்களை வாங்கியது. யமாசாக்கி ஒரு கோலையும் கவாபி ஒரு கோலையும் அடிக்க ஜப்பான் 5-2 என்று முன்னிலை பெற்று போட்டியையே வென்று விட்டது.

மேலும் ஜப்பானியர்கள் வேகமாக ஓடியும் ஷார்ட் பாஸ்களில் தீவிரமாகவும் ஆடினர், இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் ஷார்ட் பாஸ்கள் இல்லை. லாங் பாஸ்கள் எல்லா நேரத்திலும் ஒர்க் அவுட் ஆகாது. ஷார்ட் பாஸ்தான் கைக்கொடுக்கும். மற்ற வீரர்கள் அந்தந்த இடத்தில் செட்டில் ஆகி பந்துக்காக பொசிஷன் செய்து கொள்வதற்கும் இடம் தரும், லாங் பாஸ் எடுத்து ஆட பெரிய அனுபவம் தேவை.

முதல் கால்மணி ஆட்டத்திலிருந்தே ஜப்பான் முழுக்கட்டுப்பாட்டுடன் ஆடியது, இது இளம் இந்திய அணி, முழுக்க சீனியர்களை ஒதுக்கி விட்டு அணியை தேர்வு செய்திருக்கக் கூடாது, உலகக்கோப்பையை மனதில் கொண்டு இந்தத் தொடரை தோற்கலாம் என்ற மனநிலைக்கு தேர்வுக்குழு வந்து விடக்கூடாது என்பதே முக்கியம். இந்தியாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு கோலுக்கு வெகு அருகே வீணானது.

பிறகு 23வது நிமிடத்தில் ஜப்பானின் கென் நகாயோஷி பெனால்டி கார்னரை கோலாக மாற்றியதில் ஜப்பான் 1-0 என்று முன்னிலை வகித்தது. இடைவேளையின் போது 1-0 என்ற முன்னிலைதான் ஜப்பான் பெற்றிருந்தது. பிறகு 39வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோசேய் கவாபே இன்னொரு கோலை அடித்து 2-0 ஆக்கினார்.

அதன் பிறகு இந்திய அணியில் இன்று கொஞ்சம் வேகமும் ஆக்ரோஷமும் காட்டிய ராஜ்பார் இந்தியாவின் முதல் கோலை அடித்தார். ஆனால் கடைசி கால் மணி நேர ஆட்டத்தில்தான் ஜப்பான் வெறி கொண்டு ஆடி 3 கோல்களை திணித்தது. இந்தியா ஒரேயொரு கோலை மட்டுமே அடித்தது. இடையிடையே நல்ல நல்ல கோல் வாய்ப்புகள் ஒன்று தவறான இலக்கில் சென்றது. அல்லது ஜப்பான் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார், கடைசியில் கூட இந்தியாவுக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது ஜப்பான் கோல் கீப்பர் அதை தடுத்தார்.

இந்தோனேசியாவுக்கு எதிராக ஜப்பான் அடித்தது போல் 9 கோல்களை இந்தியா அடித்தால் அதே வேளையில் பாகிஸ்தானை ஜப்பான் வீழ்த்தினால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் எனவே அடுத்த சுற்று வாய்ப்பு மிக மிகக் கடினமே. கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்கள் இந்த முறை முதல் சுற்றிலேயே வெளியேறி விடும் போல்தான் தெரிகிறது.

Published by:Muthukumar
First published:

Tags: Asia championship hockey, India