ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதி உறுதி- இன்று ஆசியக்கோப்பை ஹாக்கியில் மோதல்

தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதி உறுதி- இன்று ஆசியக்கோப்பை ஹாக்கியில் மோதல்

ஆசியக் கோப்பை ஹாக்கி இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசியக் கோப்பை ஹாக்கி இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இன்று இந்தியா, தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதிக்கு நிச்சயமாக முன்னேறும்.

  11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் 'டிரா' கண்டது.

  இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. தென்கொரியாவை சாய்த்து இறுதி சுற்றை எட்டும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

  தோற்கும் அணிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது ஜப்பான்-மலேசியா இடையிலான மற்றொரு ஆட்டத்தின் முடிவை பொறுத்து தெரிய வரும். ஜப்பான் இரு ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்து விட்டது. மலேசியா 2 டிராவுடன் 2 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

  இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தியா-தென்கொரியா ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

  இந்தியா அன்று மலேசியாவுக்கு எதிராக 2 கோல்கள் பிந்தங்கி பிறகு ராஜ்பரின் அற்புதமான ஆட்டத்தினால் 3-2 என்று முன்னிலை பெற்றது, ஆனால் ரஜி ரஹீம் மலேசியாவுக்காக ஹாட்ரிக் கோலை அடிக்க ஆட்டம் ட்ரா ஆனது.

  தென் கொரியா +2 என்ற கோல் வித்தியாசத்தில் முதலிடத்திலும் இந்தியா +1 கோல் வித்தியாசத்தில் 2ம் இடத்திலும் உள்ளது. மலேசியா 5 கோல்கள் போட்டு 5 கோல்கள் வாங்கியுள்ளதால் கோல் வித்தியாசம் இல்லை, எனவே இன்றைய ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மலேசியா குறைந்தது 2 கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்,அதாவது இந்திய அணி தென் கொரியாவுடன் ட்ரா செய்தால் இந்த நிலைமை. இந்தியா நேரடியாக வென்று விட்டால் இறுதிக்கு முன்னேறும்.

  தென் கொரியாவை வீழ்த்துவது அத்தனை சுலபமல்ல, அதே வேளையில் இந்திய அணி முதல் 2 போட்டிகளுக்குப் பிறகு இந்தோனேசியாவை 16-0 என்று யாரும் எதிர்பாராத வகையில் வென்று பாகிஸ்தானை வெளியேற்றி சூப்பர் -4 சுற்றுக்குத் தகுதி பெற்றது, அதன் பிறகே பிரமாதமாக ஆடி வருகிறது. ராஜ்பர், உத்தம் சிங், எஸ்.வி.சுனிலுடன் கேப்டன் லக்ராவும் பார்முக்குத் திரும்பியுள்ளனர்.

  தென் கொரியாவை இந்தியா ஜெயிக்க இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக ஆட வேண்டும் இல்லையெனில் கடினம்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Asia championship hockey