ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய இந்திய வீரர் ஆட்டோ ஓட்டும் பரிதாபம்; வறுமையை வெல்ல வழியில்லாமல் பரிதவிக்கும் கொடூரம்

உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய இந்திய வீரர் ஆட்டோ ஓட்டும் பரிதாபம்; வறுமையை வெல்ல வழியில்லாமல் பரிதவிக்கும் கொடூரம்

அரிந்தம் கோஷல்

அரிந்தம் கோஷல்

பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து விளையாடிய இந்திய வீரர் ஒருவர் இன்று வயிற்று பிழப்புக்காக ஆட்டோ ஓட்டி வருவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அரிந்தம் கோஷல் என்பவர் மத்தியம் கிராமில் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு  அரிந்தம் பிரேசிலில் நடைபெற்ற  FIFA Homeless World Cup தொடரில் விளையாட இந்திய அணி சார்பில் கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது பெருமையாக கருதப்பட்டது.

  கோல் கீப்பராக சிறப்பாக விளையாடி பாராட்டுகளையும் பெற்றார் அரிந்தம் கோஷல். ஈஸ்ட் பெங்கால் ஜூனியர்ஸ், FCI, மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் . எப்படியும் கால்பந்து போட்டியில் சாதித்து காட்டி விடலாம் என நினைத்துக்கொண்டிருந்த கோஷலுகு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

  கால்பந்து விளையாட்டின்போது பலத்த காயம் அடைந்த கோஷலுக்கு வலது காலின் முழங்கால் மூட்டு மூன்று துண்டுகளாக உடைந்தது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து விளையாட வந்த கோஷலுக்கு மனவலிமை வெகுவாக குறைந்ததால் கால்பந்து விளையாட்டில் சோபிக்க முடியவில்லை. இருப்பினும் கால்பந்து மீதான காதலால் உலக கோப்பை விளையாடிய கோஷலுக்கு கால்பந்தை விட்டு விலகி செல்ல முடியவில்லை. இருந்தாலும் வறுமை அவரை வாட்டி வதைத்தது.

  பணம் இல்லாததால் கோஷல் காலில் இருந்த ஆபரேஷன் வயரை இன்னும் அகற்ற முடியாமல் தவித்து வருகிறார். இருந்தாலும் தான் உயிராக நினைத்த கால்பந்தை இன்றும் மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்த கோஷல் தற்போது அவரது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

  இதையும் படிங்க: கத்தார் உலகக்கோப்பையை தமிழ் வர்ணனையில் கலக்கும் திருச்சி இளைஞர்... யார் இவர்?

  குடும்ப வறுமை காரணமாக ஹோம்லெஸ் உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய கோஷல் தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆட்டோவை எடுத்துக்கொண்டு காலையில் செல்லும் கோஷல் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோவை ஓட்டி தனது வறுமையை போக்கி வருகிறார். ஆனால் அவரது கனவெல்லாம் கால்பந்து விளையாட்டையே சுற்றி இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் பல்வேறு கால்பந்து அணிகளுக்கு விளையாட ஆர்வமாக இருக்கிறார்.

  கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் பிரேசில் அணி விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என கோஷல் விரும்பினார். ஆனால் அது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. வறுமையில் இருந்த கோஷலுக்கு மத்தியம்கிராம் எம்எல்ஏவும், உணவுத்துறை அமைச்சருமான ரத்தின் கோஷ் ஆதரவுடன் கோஷல் தற்போது ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். பிரேசில் மண்ணில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய அனுபவத்தில் இருந்தும் இன்று பிழைப்புக்காக போராடி வருகிறார். இருப்பினும், அவரது கனவுகளை உயிருடன் வைத்திருக்க, அவர் தொடர்ந்து பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Brazil, FIFA World Cup 2022, Football