வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் பிஃபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
இந்த 32 நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தாங்கள் விரும்பும் வீரர் மற்றும் அவரது அணிகளை உற்சாகப்படுத்த கத்தார் நாட்டிற்கு வந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கேரளா மாநிலத்தில் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணிகளுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படி தான் கேரளாவைச் சேர்ந்த இக்பால் என்ற ரசிகர் தனக்கு பிடித்த அர்ஜெண்டினா அணி போட்டியை காண கத்தார் மைதானத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அர்ஜெண்டினா ரசிகை ஒருவர் கத்தாரில் இந்திய கொடியை உடலில் போர்த்தியிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணிடம் சென்ற இக்பால் இந்திய கொடியை போர்த்தியுள்ளதன் காரணம் என்னவென்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். அப்போது அவர், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அவரின் பெயர் லேட்டி எஸ்டிவேஸ். இந்திய ரசிகர்கள் பலர் அர்ஜெண்டினா அணிக்கு ஆதரவு தெரிவிப்பது பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. எனவே, இந்திய ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இந்திய கொடியை போர்த்தி போட்டிக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
இதை தெரிந்துகொண்டதும் இந்திய ரசிகர் இக்பால் அந்த பெண்ணிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த பெண்ணுக்கு இந்திய ரசிகருடன் இணைந்து போஸ் அளித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்திய ரசிகர்களின் கால்பந்து மோகத்தை பார்த்து மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் ஆகியோர் ஒரு நாள் கேரளாவுக்கு வருகை தருவார்கள் என்று நம்புவதாக இருவரும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup 2022