முகப்பு /செய்தி /விளையாட்டு / Diego Maradona |அர்ஜென்டீனா கால்பந்து லெஜண்ட் மாரடோனா மரணத்தில் மர்மம்: மருத்துவர்கள் சந்தேகம்

Diego Maradona |அர்ஜென்டீனா கால்பந்து லெஜண்ட் மாரடோனா மரணத்தில் மர்மம்: மருத்துவர்கள் சந்தேகம்

டீகோ மாரடோனா.

டீகோ மாரடோனா.

அர்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் டீகோ மாரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக திங்களன்று கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் புதிய குண்டைத் தூக்கிப்போட்டுள்ளனர்.

  • Last Updated :

12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.

20 மருத்துவர்கள் சேர்ந்து எழுதிய மருத்துவ அறிக்கையை மருத்துவக் குழு 2 மாதங்கள் ஆராய்ந்தது. 1986 உலகக்கோப்பையை அர்ஜென்டீனா வெல்ல மாரடோனாதான் காரணம். அந்தப் புகழ்பெற்ற ஹேண்ட் ஆஃப் காட், கடவுளின் கை என்ற பதம் அப்போது முதல் பிரபலமானது. அனைத்து காலத்துக்குமான கிரேட் கால்பந்து வீரர் ஆவார் மாரடோனா. உலகம் முழுதும் இவரது ஆட்டத்தைப் பார்க்க மைதானங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி முன்பும் ரசிகர்கள் படை அமரும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மாரடோனா மாரடைப்பால் பியூனஸ் அய்ரஸ் நகருக்கு வெளியே வாடகை வீட்டில் இறந்தார். அவருக்கு அதற்கு முன்னர்தான் மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் மருத்துவ அறிக்கையில், “அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற மருத்துவ விவரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 மணி நேரம் அவர் உயிருக்கு வேதனையுடன் போராடியுள்ளார். வாடகை வீட்டில் இருந்த அவருக்குக் கிடைத்த மருத்துவ உதவிகள் போதாமையாக இருந்தது. அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவர் நிச்சயம் பிழைத்திருப்பார் என்று மருத்துவ அறிக்கையில் 20 மருத்துவர்களும் கூறியுள்ளனர்.

மாரடோனா அளவுக்கதிகமாக போதை மருந்தான கொகெய்ன் எடுத்துக் கொள்பவர், அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கமுடையவர். 2000 மற்றும் 2004-ல் கிட்டத்தட்ட இறப்பின் வாசலைத் தொட்டதாக கூறப்படுவதுண்டு.

ஆனால் இந்த மருத்துவ அறிக்கை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஜோடிக்கப்பட்டது என்ற விமர்சனமும் அங்கு எழுந்துள்ளது. அவருக்கு நவம்பர் 3, 2020-ல் மூளை அறுவை சிகிச்சை நடந்தது 25 நவம்பர் 2020-ல் அவர் மரணமடைந்துள்ளார்.

top videos

    பிரமாதமான நடுக்கள வீரர் ஆன மாரடோனாவை கட்டுப்படுத்தினால் அர்ஜெண்டினாவை வீழ்த்தி விடலாம் என்பதுதான் அவர் ஆடிய காலத்தில் எதிரணிகளின் உத்தியாக இருந்தது, மாரடோனா கால்களுக்கு பந்து வந்து விட்டால் அது கோலாக மாறாமல் செல்வது அரிதானதே, அவரது மின்னல் வேகத்தின் முன்னால் எதிரணியினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர். தேசிய நாயகனான மாரடோனாவை சரியாக கவனிக்காமல் இறக்கட்டும் என்று விட்டு விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அங்கு எழுந்தது. இப்போது மருத்துவ அறிக்கையும் அதை உறுதி செய்துள்ளது.

    First published:

    Tags: Argentina, Football