Copa America 2021 | Lionel Messi : மெஸ்ஸியின் பாய்ச்சலில் ரோட்ரிகெஸ்ஸின் கோல்: 32 ஆண்டுகளாக அர்ஜெண்டீனாவை வீழ்த்த முடியாத உருகுவே

மெஸ்ஸி. | கோப்புப் படம்.

பிரெசிலியாவில் நடைபெற்ற குரூப் ஏ ஆட்டத்தில் அர்ஜெண்டீனா அணி உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

  • Share this:
    இந்த வெற்றி மூலம் அர்ஜெண்டினா கடந்த 15 போட்டிகளாக தோல்வியடையாமல் ஆடி வருகிறது. கடைசியாக 2019 கோப்பா அமெரிக்கா கால்பந்தில் அரையிறுதியில் தோற்றதோடு சரி.

    ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸியின் அருமையான ஒரு பாய்ச்சல் ஆட்டத்தில் கார்னர் கிக்கை ஷார்ட் பாஸாக மாற்றி மெஸ்ஸி பந்தை அருமையாக தூக்கி கோல் அருகே அடிக்க, அங்கு ரோட்ரிகெஸ் எம்பி அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அர்ஜெண்டினா 1-0 என்று முன்னிலை, இதுவே வெற்றிக்கான கோலாகவும் மாறியது..

    மெஸ்ஸி அளித்த பாஸை கோலாக மாற்றிய ரோட்ரிகெஸ்.


    உருகுவே அணி கோப்பா அமெரிக்கா கால்பந்தில் 1989-க்குப் பிறகு அர்ஜெண்டினாவை வீழ்த்தியதில்லை, இப்போதும் வீழ்த்த முடியவில்லை. உருகுவேவுக்கும் அர்ஜெண்டினா ஆட்டத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.

    உதாரணமாக ஆட்டம் தொடர்பான சில புள்ளி விவரங்களை பார்த்தால் புரியும். அர்ஜெண்டீனாவுக்கு எட்டு கார்னர் கிக் வாய்ப்புகள் கிடைக்க உருகுவே அணிக்கு 3 முறை கார்னர் வாய்ப்பு கிடைத்தது. உருகுவே 5 முறை கோல்களை தடுத்தது, ஆனால் அர்ஜெண்டினா அப்படி சேவ் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை காரணம் கோல் அடித்து விடுவோம் என்ற அச்சுறுத்தலை உருகுவே அர்ஜெண்டீனாவுக்கு அளிக்கவே இல்லை.

    அர்ஜெண்டினா அணி 9 முறை கோலை நோக்கி ஷாட் அடிக்க 6 ஷாட் இலக்கை நோக்கி அமைந்தன மாறாக உருகுவே 4 ஷாட்களை கோலை நோக்கி அடித்தாலும் எதுவும் இலக்கை நோக்கி அமையவில்லை என்பதுதான் உருகுவேயின் இன்றைய ஆட்டத்தின் தன்மை.

    Also Read:  Euro 2020- மூக்கில் ரத்தம் கொட்ட பாட்ரிக் ஷிக் அடித்த கோல்; பெரிசிச்சின் மேஜிக் கோல்- முரட்டு ஆட்டத்தில் குரேஷியா-செக். குடியரசு ட்ரா

    Also Read: Euro 2020 | யூரோ கோப்பை: இங்கிலாந்து சுத்த வேஸ்ட்- இரும்புக் கோட்டை அமைத்த ஸ்காட்லாந்து: 0-0 ட்ரா

    ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே அர்ஜெண்டீனாவின் மார்கஸ் அகுனா உருகுவே கோல் அருகே சென்று இடது காலால் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. 6வது நிமிடத்தில் உருகுவே வீரர் மத்தியாஸ் வினா ஃபவுல் செய்ய மெஸ்ஸிக்கு வலது ஓரம் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பாக்சுக்கு வெளியேயிருந்து லியோனல் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக் இடது மூலையில் தடுக்கப்பட்டது. மீண்டும் வந்த பந்தை கொன்சாலேஸ் கோலாக மாற்றத் தவறினார். மிக அருமையான ஷாட் மெஸ்ஸி அடித்தது.

    8வது நிமிடத்தில் அர்ஜெண்டீனாவின் தாக்குதலை முறியடிக்க உருகுவே வீரர் எடின்சன் கவானி ஃபவுல் செய்தார். இதன் காரணமாக இடது ஓரம் அர்ஜெண்டினா வீரர் அகுனா ஃப்ரீகிக் ஷாட்டை அடித்தார். இவர் அடிக்க உருகுவே கோல் அருகே மத்தியில் நின்றிருந்த கிரிஸ்டியன் ரொமீரோ தலையால் முட்டிய ஷாட் தடுக்கப்பட்டது.

    11வது நிமிடத்தில் இன்னொரு உருகுவே வீரர் ரோட்ரீகோ பெண்டங்கர் ஃபவுல் செய்தார். இதனையடுத்து அர்ஜெண்டினா வீரர் குடியோ ரோட்ரிகெஸ் ஃப்ரீ கிக்கை அடிக்கத் தயாரானார். இந்த ஷாட்டை தடுக்கும் உருகுவேயின் முயற்சி அர்ஜெண்டீனாவுக்குச் சாதகமாக கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    இந்த கார்னர் ஷாட்டை நேராக கோலுக்கு அருகில் பாக்ஸுக்குள் அடிக்காமல், கார்னர் வாய்ப்பையே ஷார்ட் பாஸாக ஆட முடிவெடுத்தனர். டீ பால் என்ன செய்தாரென்றால் ஷார்ட் பாசை மெஸ்ஸிக்கு அடிக்க தாதாகிரியான மெஸ்ஸி மிகத் துல்லியமாக அதை தன் இடது காலால் கோல் அருகே தூக்கி அடிக்க அங்கு ரோட்ரிகெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். மிக சாமர்த்தியமான ஒரு மூவ். நேராக கார்னர் ஷாட்டை தூக்கி அடித்து அது என்ன ஆகும் என்றே சொல்ல முடியாது, ஷார்ட் பாஸ் செய்து அதற்குள் அங்கு அர்ஜெண்டினா வீரர்கள் தயாராவதற்கு நேரம் அளித்து மெஸ்ஸியின் துல்லிய பாஸ் கோலாக மாற்றப்பட்டது.

    அதன் பிறகு மெஸ்ஸியின் பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்த உருகுவே நிறைய ஃபவுல் செய்தது, அவரைச் சுற்றி தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டியாதாயிற்று, அதனால் உருகுவேயினால் அர்த்தமுள்ள எந்த ஒரு கோல் முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மற்றபடி இந்த ஆட்டத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை, ரசிகர்களற்ற காலி ஸ்டேடியம் தென் அமெரிக்க கால்பந்து ஸ்டைலுக்கும் ஸ்பிரிட்டுக்கும் எதிரானது.

    இந்த வெற்றி மூலம் அர்ஜெண்டீனா அணி இந்தப் பிரிவில் சிலி அணியுடன் இணைந்து டாப்-ல் உள்ளது, சிலி அணி பொலிவியாவை முன்னதாக 1-0 என்று வெற்றி பெற்றது. பராகுவா அணி 3 புள்ளிகளுடன் இருக்கிறது.

    அர்ஜெண்டீனா அணி அடுத்ததாக திங்களன்று பராகுவா அணியைச் சந்திக்கிறது. இதே நாளில் உருகுவே-சிலி அணிகள் மோதுகின்றன.
    Published by:Muthukumar
    First published: