உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி யுத்தம் இன்று இரவு களைகட்டவுள்ளது. போட்டி என்னமோ அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இருந்தாலும் மெஸ்ஸியா? எம்பாப்பேவா? என ரசிகர்கள் மோத தயாராகியுள்ளனர்.
கால்பந்து விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் திருவிழா என்பதில் சந்தேகமே இல்லை. உலகின் உட்சபட்ச திருவிழாவின் கிளைமேக்ஸ் போட்டியான கத்தார் உலகக் கோப்பையின் இறுதி யுத்தம் இன்று நள்ளிரவு லூசாய்ல் மைதானத்தில் களைகட்டவுள்ளது. கடந்த ஒரு மாதாமாக நடைபெற்றுவந்த கால்பந்து திருவிழாவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இறுதி யுத்தத்தில் போராடவுள்ளனர்.
ஆறாவது முறையாக இறுதி யுத்தத்தில் அர்ஜெண்டினா அணியும், நான்காவது முறையாக பிரான்ஸ் அணியும் மல்லுகட்டவுள்ளனர். 1978 மற்றும் 86ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்திய அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக மகுடம் சூட காத்திருக்கிறது. அதே போல் 1998 மற்றும் 2018ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் அணியும் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல போட்டி போடுகின்றன. கடந்த நான்கு உலகக் கோப்பை ஐரோப்பிய அணிகளே சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். எனவே இம்முறை தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினா வென்று ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறது.
இதையும் படிங்க: IND vs BAN Test: 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. தொடரில் முன்னிலை
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது கை எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. ஏழு முறை பாலன் டி ஆர் விருது என கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவருகிறது இம்முறை அதை எட்டிப்பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுடனான போட்டியின் போது கணுக்கானில் காயம் ஏற்பட ஓய்வில்லாமல் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியதால் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் மெஸ்ஸி இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டி மரியா-வின் காயம் ஏற்கனவே அச்சுருத்த தற்போது மெஸ்ஸியும் காயத்தில் இருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மற்றொரு நட்சத்திரம் ஆல்வரஸ் அசுர பலத்தில் இருப்பது அர்ஜெண்டினா அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மேலும் கோல் கீப்பர் மார்டினஷ் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
இதையும் படிங்க: WATCH – குரோஷியா – மொராக்கோ கால்பந்தாட்ட போட்டியின் ஹைலைட்ஸ்…
பிரான்ஸ் அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் எம்பாப்பே மற்றும் ஜூரூட் ஆகியோர் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துவந்துள்ளனர். இருவரும் சேர்ந்து ஒன்பது கோல்களை விளாசியுள்ளனர். அனைத்து துறைகளிலிம் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ள இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதற்கு முன் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் லீக் ஆட்டங்களில் இரண்டு முறை அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் அணி - அர்ஜெண்டினாவை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது. எனவே இதற்கு இறுதி யுத்தத்தில் பழிதீர்க்க காத்திருக்கிறது மெஸ்ஸி படை, லூசாய் மைதானத்தில் 89 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி இருந்தாலும் ஒரு டிக்கெட் ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA World Cup 2022, France