முகப்பு /செய்தி /விளையாட்டு / Brazil vs Argentina Final | ‘ஏஞ்சல்’ டீ மரியாவின் கோல்- 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டீனா சாம்பியன்: போராடி வீழ்ந்தது பிரேசில்

Brazil vs Argentina Final | ‘ஏஞ்சல்’ டீ மரியாவின் கோல்- 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டீனா சாம்பியன்: போராடி வீழ்ந்தது பிரேசில்

தன் முதல் கோப்பையுடன் மெஸ்ஸி.

தன் முதல் கோப்பையுடன் மெஸ்ஸி.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.

  • Last Updated :

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் ஆனது.

மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டீனா வெல்லும் முதல் பெரிய கோப்பையாகும் இது. பிரேசில் தோல்விக் கேப்டன் நெய்மார் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் அற்புதமான லாங் பாஸ் ஒன்று மைதானத்தின் இடதுபுறத்திலிருந்து வலது புறத்துக்கு குறுக்காக அடிக்கப்பட அங்கு மார்க் செய்யப்படாமல் தனியாக இருந்த டீ மரியா பந்தை அற்புதமாக கட்டுப்படுத்தி பவுன்ஸ் ஆன பந்தை லேசாக கோலுக்குள் தூக்கி விட்டார், அங்கு பிரேசில் கோல் கீப்பரைத் தவிர யாருமில்லை. பிரேசில் தடுப்பாட்டத்தில் அயர்ந்த தருணத்தை அற்புதமான லாங் பாஸ் மூலம் பயன்படுத்தி அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை வகித்தது, இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.

அதாவது 21-வது நிமிடத்தில் பிரேசில் தாக்குதலிலிருந்து மீண்ட அர்ஜெண்டினா மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் தருணம், தங்கள் பகுதியில் தனக்கு வந்த பந்தை அர்ஜெண்டீனா வீரர் ரோட்ரீகோ டி பால் இடது புறத்திலிருந்து குறுக்காக ஒரு லாங் பாஸை மேற்கொள்ள அது  எதிர்த்திசையில் வலது ஓரத்திலிருந்த ஏஞ்செல் டி மரியாவுக்கு வர அதை அருமையாகக் கட்டுப்படுத்தி பவுன்ஸ் ஆன பந்தை காலியாக இருந்த பிரேசில் கோலுக்குள் தூக்கி விட்டார், எடர்சனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை வகித்தது.

வெற்றி கோலை அடித்த நாயகன் ஏஞ்செல் டி மரியா

கடைசியில் ஒரு அருமையான மூவில் மெஸ்ஸி 2வது கோலை அடித்திருப்பார், அவரும் பிரேசில் கோல் கீப்பரும் மட்டுமே இருந்த அந்தத் தருணத்தில் மெஸ்ஸியின் காலில் பந்து சிக்கி அகப்பட்டுக் கொண்டதால் கோல் அடிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை அவர் எப்படி தவற விட்டார் என்று தெரியவில்லை.

Also Read: கோபா அமெரிக்க கால்பந்து : கடைசி நிமிடத்தில் த்ரில் கோல்... பெருவை வீழ்த்தி கொலம்பியா மூன்றாவது இடம்

ஆட்டம் முழுதும் இரு அணிகளும் ஃபவுல்களால் நிரம்பியதாக இருந்தது முதல் 33 நிமிடங்களிலேயே மொத்தம் 17 பவுல்கள், அர்ஜெண்டீனா 9 பிரேசில் 8. ஆட்டம் முடியும் போது மொத்தம் 41 ஃபவுல்கள் இதில் பிரேசில் 22 என்று முன்னிலை பெற அர்ஜெண்டீனா 19 என்று சற்றே பின்னடைந்தது. மொத்தம் 9 மஞ்சள் அட்டைகள்.  அர்ஜெண்டீனா 5, பிரேசில் 4.

நெய்மாரா, மெஸ்ஸியா என்று பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் நெய்மாருக்கென்றே 3 தடுப்பு வீரர்களை அர்ஜெண்டீனா நியமிக்க நெய்மார் பாயும்போதெல்லாம் ஆட்கொள்ளப்பட்டார். குறிப்பாக 81வது நிமிடத்தில் நெய்மார் ஜூனியருக்கு கொஞ்சம் இடம் கிடைக்க படுவேகமாக பந்தை எடுத்துச் சென்றார் ஆனால் அர்ஜெண்டீனா வீரர் ஆட்டாமெண்டி அவரை வன்முறையாக தடுத்தார், மெஸ்ஸி குட்டிக்கரணம் அடித்து கீழே விழுந்தார், ஆட்டமெண்டிக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது.

வெற்றி மகிழ்ச்சியில் மெஸ்ஸியை தூக்கிப் போட்டு கொண்டாடும் அர்ஜெண்டீனா படை.

பிரேசிலின் இரண்டு கோல் முயற்சிகளும் ஆஃப் சைடு ஆனது, ஒருமுறை ரிகார்லிசன் ஷாட் கோல் வலையைத் தாக்க கொண்டாட்டம் ஆஃப் சைடு கொடியினால் நிறுத்தப்பட்டது. பிரேசில் ஷாட் பாஸ்களை ஆடியதில் அர்ஜெண்டீனாவின் தடுப்பை ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தது. போராடியது. ஒருவேளை லாங் பாஸ் ஆடியிருந்தால் கைகொடுத்திருக்கலாம்.

மற்றபடி பிரேசில் தாக்குதல் ஆட்டம் ஆடினாலும் கோல் இலக்கை நோக்கிய ஷாட்கள் சரியாக அமையவில்லை. ஆனாலும் கோலுக்காக போராடியது பிரேசில்,  மொத்தம் 13 ஷாட்களை கோலை நோக்கி அடித்ததில் 2 மட்டுமே இலக்கு நோக்கி அமைந்தது. ஆனால் அர்ஜெண்டீனா திறம்பட தடுத்து ஆட்கொண்டது. நெய்மாரும் கொஞ்சம் ஃபேன்சி கால்பந்தாட்டம் ஆடினாரே தவிர சீரியஸான முயற்சி என்பது அவரிடத்தில் உத்தி ரீதியாக இல்லை என்றே கூற வேண்டும். தன்னை தடுக்க 3 வீரர்கள் போடப்பட்டிருக்கும் போது நெய்மார் தன்னை முன்னிலைப்படுத்தியே ஆட்டத்தை ஆடியிருக்கக் கூடாது, கொஞ்சம் ஒதுங்கியிருந்து அதாவது மறைந்து ஆடியிருந்தால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருந்திருந்தால் ஒருவேளை பிரேசில் சமன் செய்திருக்கலாம்.

முன் வரலாறு: 

இதுவரை 108 முறை இரு அணிகளும் மோதல்; கோப்பா இறுதியில் 5ம் முறை:

இரு அணிகளும் மொத்தம் 108 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, ஆனால் 5 முறை மட்டுமே பெரிய தொடர்களில் இறுதியில் மோதியுள்ளன. இதில் 1937ம் ஆண்டு அர்ஜெண்டீனா 2-0 என்று வென்றது. 2004-ல் இரு அணிகளும் 2-2 என்று டிரா செய்ய பெனால்டியில் பிரேசில் 4-2 என்று வென்று 7வது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2005 கான்பெடரேஷன் கோப்பை இறுதியில் மீண்டும் இரு அணிகளும் மோதிய போது அர்ஜெண்டீனாவை பிரேசில் 4- 1 என்று காலி செய்து கோப்பையை வென்றது. பிறகு கடைசியாக 2007 கோப்பா அமெரிக்கா இறுதியில் அர்ஜெண்டீனாவை பிரேசில் 3-0 என்று நொறுக்கியது.

top videos

    இப்போது பிரேசிலை 1-0 என்று வீழ்த்தி கோப்பையை வென்று வரலாற்றை தலைகீழாக்கியது அர்ஜெண்டீனா.

    First published:

    Tags: Argentina, Brazil, Football