உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரின் பரிசளிப்பு விழாவில், அர்ஜென்டினா கோல்கீப்பர் ஏமிலியனோ மார்டினஸ் அருவருப்பாக நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று மோதின. இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதாலும் கோப்பையை பெற இரு அணிகளும் மல்லுக்கட்டியதாலும் இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் அமைந்தது.
ஆட்டத்தின் 78வது நிமிடம்வரை அர்ஜென்டினா 2 கோல்களை அடித்து முன்னிலையில் இருந்தது. அடுத்த 4 நிமிடத்திற்குள் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே 2 கோல்களை அடித்து சமநிலை படுத்தினார். கூடுதலாக ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, பெனால்டி ஷூட் அவுட் முறையில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்க முடிவுசெய்யப்பட்டது.
இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் எமிலியனோ மார்ட்டினஸ் முக்கிய காரணமாக அமைந்தார். அற்புதமாக அவர் பெனால்டி ஷூட் அவுட்டில் 2 கோல்களை தடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த தொடர் முழுவதும் எமிலியனோ சிறப்பாக விளையாடியதால் அவருக்கு கோல்டன் க்ளோஸ் எனப்படும் தங்க கையுறை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கத்தார், பிரான்ஸ், அர்ஜெண்டினா மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட சங்க தலைவர்கள் இணைந்து அவருக்கு வழங்கினார்.
Emi Martìnez wins the golden glove.
And then does this with it. pic.twitter.com/Mt43auNBJX
— Gareth Davies (@GD10) December 18, 2022
விருதை பெற்றுக் கொண்டு நடந்து சென்ற எமிலியனோ ரசிகர்களைப் பார்த்து அருவருப்பான முறையில் சைகை செய்தார். அவரது இந்த செயல் பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
Emiliano Martinez managed to ruin everything. pic.twitter.com/oHnUv6sEbw
— Antonello Guerrera (@antoguerrera) December 18, 2022
நேற்று கொண்டாட்டத்திற்கு மத்தியில் அதிகம் பேசப்படாத இந்த விஷயம், இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அர்ஜென்டினா கோல்கீப்பருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA World Cup 2022