ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA World Cup 2022 : 36 முறை தொடர்ந்து தோல்வியே சந்திக்காத அர்ஜெண்டினா அணி சவுதியிடம் வீழ்ந்தது

FIFA World Cup 2022 : 36 முறை தொடர்ந்து தோல்வியே சந்திக்காத அர்ஜெண்டினா அணி சவுதியிடம் வீழ்ந்தது

FIFA World Cup 2022

FIFA World Cup 2022

FIFA World Cup 2022 | உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் போட்டிகளில் அர்ஜெண்டினா அணி சவுதியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஃபிஃபா உலக்கோப்பை கால்பந்து தொடரில் வலுவான அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் போட்டியிலேயே அர்ஜெண்டினா தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அர்ஜெண்டினாவை சவுதி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் கடைசி 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அர்ஜெண்டினா அணி இறுதியாக சவுதி அரேபியாவிடம் அந்த சாதனையை இழந்துள்ளது.

    இந்த போட்டியில் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து நடப்பு உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி. ஆனால் அதற்கு அடுத்த பின் அர்ஜெண்டினா கோல் ஏதும் அடிக்கவில்லை. 2ம் பாதி தொடங்கியதுமே ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி வீரர் அல்ஷெரி கோல் அடிக்க, 54வது நிமிடத்தில் அல்டவ்சராய் அடுத்த கோலை அடித்தார்.

    Also Read : பிஃபா உலகக் கோப்பை தொடரை தமிழ் வர்ணனையோடு நேரலையில் பார்ப்பது எப்படி?

    மெஸ்ஸி நடப்பு உலகக்கோப்பை தொடரே இறுதி என்று அறிவித்து இருந்தார். அதனால் இந்த முறை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: FIFA, FIFA 2022, FIFA World Cup 2022