டோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்

பிரவின் ஜாதவ்

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் போட்டியில் இந்திய வீரர் பிரவின் ஜாதவ் உலகின் நம்பர் 2 ரஷ்ய வீரர் கல்சன் பசார்க்கபோவ் என்பவரை 6-0 என்று வீழ்த்தினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் போட்டியில் இந்திய வீரர் பிரவின் ஜாதவ் உலகின் நம்பர் 2 ரஷ்ய வீரர் கல்சன் பசார்க்கபோவ் என்பவரை 6-0 என்று வீழ்த்தினார்.

    இந்த வெற்றி மூலம் லாஸ்ட்-32 சுற்றுக்கு முன்னேறினார் பிரவின் ஜாதவ். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணிக்காக ஆடிய கல்சான் உலகின் நம்பர் 2 வீரர். 9 முறை அம்பு எய்தியதில் 2 முறையே 10 புள்ளிகள் இலக்கை தாக்கினார். ஒரு முறை அவர் 7 என்ற புள்ளியை தாக்கியும் ஏமாற்றமளித்தார்.

    மாறாக ஜாதவ் 9 அம்பு எய்தலில் 4 முறை 10 புள்ளிகள் இலக்கை துல்லியமாக தாக்கினார். அடுத்த சுற்றில் உலகின் நம்பர் 1 அமெரிக்க வீரர் பிராடி எல்லிசன் என்பவரைச் சந்திக்கிறார் ஜாதவ்.

    இறுதி 32 சுற்று எலிமினேஷன் அதாவது வெளியேறுதல் சுற்றாகும். இதில் ஜாதவ் வெல்வது கடினம் என்றாலும் உலகின் நம்பர் 2 வீரரை 6-0 என்று வீழ்த்தியதால் முழு நம்பிக்கையுடன் இருப்பார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னாதாக வில்வித்தை வீரர் தருண் தீப் ராய் போராடி இஸ்ரேல் வீரரிடம் தோல்வி கண்டார். 5-5 என்ற நிலையில் ஷூட் ஆஃபில் இஸ்ரேல் வீரர் இடாய் ஷானி 10-9 என்று வெற்றி பெற்றார், இஸ்ரேல் வீரர் இடாய் ஷானி தருண் தீப்பை விட 15 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய தருண் தீப் ராய்க்கு இது 2வது தொடர் 2ம் சுற்று வெளியேற்றமாகும்.
    Published by:Muthukumar
    First published: