திருச்சியில் ஒலிம்பிக் பங்கேற்பாளர்களின் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா

திருச்சியில் ஒலிம்பிக் பங்கேற்பாளர்களின் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா

திருச்சி மற்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு வீராங்கனைகளை பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தியும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  • Share this:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜுவ், தனலட்சுமி, சுபா ஆகிய3 பேர் உட்பட தமிழ்நாட்டினர் 5 பேர் தடகளப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள திருச்சி மற்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு வீராங்கனைகளை பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தியும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Also Read : டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் ஜூலை 17-ல் புறப்பாடு- இந்தியா பங்கேற்கும் போட்டிகள், வீரர்கள் பட்டியல்

திருச்சியிலிருந்து டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு திருச்சி தடகள சங்கம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டுவிழாவிற்கு திருச்சி தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமை வகித்தார்.பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளர்களாக,  தமிழ்நாடு காவல்துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு தமிழ்நாடு மேற்கு (சென்னை) மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்க உபதலைவருமான ஏ. மயில்வாகனன், நியூரோ ஒன் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் ஆகியோர்  ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும் தடகள வீரர்கள் ஆரோக்கியராஜீவ் பயிற்சியாளர் லால்குடி ராமசந்திரனுக்கும், குண்டூர் தனலெட்சுமி சேகரின் பயிற்சியாளர் பொன்மலை மணிகண்டன் ஆறுமுகம் ஆகிய இருவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர். நிகழ்ச்சியில் தடகள வீரர், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: