• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக்கில், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

ஒலிம்பிக்கில், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

தமிழக தடகள  வரலாற்றில் 2 அமைச்சர்கள், 2சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் விழா இந்த நிகழ்ச்சி.

  • Share this:
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுகிறார்களோ அந்தந்த மாவட்டங்களில் செயற்கை புல்தரை மைதானம் போடப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி, சுபா, தனலட்சுமி ஆகிய 5 தமிழக தடகள வீரர்கள் மற்றும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த பரத், நாகர்ஜூனன், டொனால்ட் ஆகிய வீரர்களை பாராட்டும் நிகழ்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், துணைத்தலைவர் சைனி வில்சன், செயலாளர் லதா, முன்னாள் ஒலிம்பியன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



டோக்கியோ ஒலிம்பிக் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக தடகள வீரர்கள் ரேவதி, சுபா, தனலட்சுமி, நாகநாதன் பாண்டி ஆகியோருக்கு பரிசு கோப்பையுடன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் பேசுகையில்,

விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பணியை திமுக அரசு நிச்சயம் செய்யும். விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்காக அவர்களது வீட்டிற்கு போய் தடுப்பூசிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுத்தவர் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின். எந்தெந்த மாவட்டங்களில் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுகிறார்களோ அந்தந்த மாவட்டங்களில் செயற்கை புல்தரை மைதானம் போடப்படும்.

Also Read : கிறிஸ் கெய்ன்சை தாக்கிய பக்கவாதம்: ஸ்ட்ரோக் ஏற்பட்டு சீரியஸ்

பயிற்சியை தடையில்லாமல் செய்யும் வகையில் உருவாக்கப்படும்.
தமிழக தடகள  வரலாற்றில் 2 அமைச்சர்கள், 2சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் விழா இந்த நிகழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதி நாளுக்கு முந்தைய நாள் தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற தருணம், இந்தியாவே கொண்டாடியது. இளைஞர் சமுதாயத்தை விளையாட்டு துறைக்குள் கொண்டு வர வேண்டும்.பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து அதிக வீரர்களை உருவாக்குவோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: