Tokyo Olympics Anti-sex beds| ஓலிம்பிக் கிராமத்தில் உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்?- ‘பகீர்’ தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்த அமெரிக்க வீரர்- கமிட்டி மறுப்பு

அமெரிக்க வீரர் பகிர்ந்த புகைப்படம். செக்ஸ் தடை படுக்கை.

கொரோனா காலம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தடுகக் கார்ட்போர்டு கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர் புகைப்படங்களைப் பகிர பரபரப்பானது.

  • Share this:
    கொரோனா காலம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தடுகக் கார்ட்போர்டு கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர் புகைப்படங்களைப் பகிர பரபரப்பானது.

    ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் போது வீரர்களுக்கு பாதுகாப்பான செக்ஸுக்காக ஆணுறைகளையும் வழங்க முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் கோவிட் அச்சத்தினால் சமூக இடைவெளி முக்கியம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செக்ஸ் வைத்து கொள்ள முடியாத கார்ட் போர்டு கட்டிலை தயார் செய்துள்ளதாக அமெரிக்க தடகள வீரர் பால் கெலிமோ தன் ட்விட்டரில் தொடர்ச்சியாக அந்த செக்ஸுக்கு எதிரான கார்ட் போர்டு கட்டில் புகைப்படங்களை வெளியிட்டார். நியூயார்க் போஸ்ட்டும் அதே செய்தியை வெளியிட்டது.

    அதாவது இந்த கார்டுபோர்டு கட்டில்கள் ஒருவருக்கு மேல் தாங்காது உடைந்து விடும் என்று அந்த செய்தி கூறியதோடு anti-sex கட்டில் என்றும் அவர் ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார்.

    ஆனால் ஒலிம்பி அமைப்பு இதனை கடுமையாக மறுத்து ஒலிம்பிக் கட்டில்கள் வலிமையானவை என்று கூறியுள்ளது. அயர்லாந்து ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லினாகன் அந்த கட்டிலில் ஏறி எம்பிக்குதித்து கட்டில் வலிமையாக உள்ளது என்ற வீடியோவை வெளியிட்டு கார்ட்போர்டு கட்டில் ஒரு போலி செய்தி என்று தெரிவிக்க தடகள வீரர்கள் ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டனர்.

    படுக்கை ஸ்ட்ராங் தான் என்று நிரூபித்துக் காட்டும் அயர்லாந்து வீரர்.


    மெக்லினாகன் இந்த வீடியோவை வெளியிட்டதற்கு ஒலிம்பிக் கமிட்டியே அவருக்கு நன்றி தெரிவித்து என்றால் கார்ட்போர்ட் கட்டில் விவகாரம் எந்த அளவுக்கு பீதியை உருவாக்கியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒலிம்பிக் கமிட்டியும், “கட்டில்கள் உறுதியானவை, வலிமையானவை” என்று போஸ்ட் போட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏற்கெனவே கட்டில்களை ஒலிம்பிக்கிற்காக உருவாக்கிய ஏர் வீவ் நிறுவனம் கட்டில்கள் 200 கிலோ எடையைத் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. எனவே இரண்டு பேரைத் தாங்கும் தன்மை கொண்டதே என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு அந்த நிறுவனமும் தள்ளப்பட்டது.

    இந்நிலையில் 1,60,000 ஆணுறைகளையும் வினியோகித்துள்ளது, ஆனால் இது ஒலிம்பிக் கிராமத்தில் பயன்படுத்த அல்ல என்று அமைப்பாளர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளனர். இதுவும் கூட எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக கொடுக்கப்பட்டதே என்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published: