Home /News /sports /

ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்று சாதனை

ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்று சாதனை

ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி

ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 4வது இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேச வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

  • News18
  • Last Updated :
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 4வது இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேச வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    29 வயதான அன்னு ராணி சீனியர் பெண்களுக்கான போட்டியில் பங்கேற்றார் முதலில் 63.82 மீ தூரம் எறிந்தார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் 60.10 மீ, 56.60 மீ, 58.13 மீ தூரம் எறிந்த அன்னு ராணி கடைசி இரு வாய்ப்புகளை வேண்டாம் என்று புறக்கணித்தார், முடிவில் முதலிடத்தை உறுதி செய்த அன்னு ராணி தங்கம் வென்றார்.

    கடந்த ஆண்டு நடந்த பெடரேஷன் கோப்பையில் 63.24 மீ தூரம் எறிந்தது இவரது சாதனையாஅ இருந்தது இப்போது 63.82 மீ தூரம் எறிந்து தன் சொந்த சாதனையையே கடந்தார்.

    கடந்த 2014-ல் சுமன் தேவி என்பாரின் சாதனையை உடைத்த அன்னு ராணி தொடர்ச்சியாக தன் சாதனைகளை 8 முறை தகர்த்துள்ளார். இந்த சீசனில் அன்னு ராணி கைப்பற்றிய 2வது தங்கமாகும் இது.

    வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை முறையே 53.87 மீ தூரம் எறிந்த சஞ்சனா தேவி, 52.01 மீ எறிந்த ஷில்பா ராணி கைப்பற்ற நடப்பு சாம்பியன் ஆன உமா சவுத்ரி 46.63 மீ தூரம் ஈட்டி எறிந்து 4வதாக முடிந்து ஏமாற்றமளித்தார்.

    அன்னு ராணி பெடரேஷன் கோப்பையில் தங்கம் வென்று, பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அன்றைய மற்ற நிகழ்வுகளில், ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான யாஷ், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தங்கப் பதக்கத்தை 67.42 மீட்டர் தூரம் எறிந்து வென்றார். செப்டம்பர் 2019க்குப் பிறகு இந்திய U-18 தடகள வீரர் ஒருவர் வீசிய இரண்டாவது சிறந்த எறிதூரம் இதுவாகும்.

    யாஷ் தனது முதல் எறிதலைத் தொடர்ந்து 65.21, 63.24, 64.05 மற்றும் 65.46 மீ தூரம் எறிந்து 57.85 மீ இறுதி எறிதலுடன் எளிதாக்கினார்.

    முன்னதாக, டெல்லியின் திஷா 16 வயதுக்குட்பட்ட பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியை 34.87 மீட்டர் தூரம் எறிந்து வெற்றி பெற்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sports

    அடுத்த செய்தி