ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே, ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு.

இந்திய லெஜண்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியை திங்களன்று சந்தித்து உரையாடினார். 

  • Share this:
    ஆந்திராவில் ஸ்போர்ட்ஸ் பல்கலைக் கழகம் அமையப்போவதையொட்டி இந்திய லெஜண்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியை திங்களன்று சந்தித்து உரையாடினார்.

    ஜெகன் மோகன் ரெட்டியின் கேம்ப் அலுவலகத்தில் அனில் கும்ப்ளே அவரைச் சந்தித்து பலதரப்பட்ட விஷயங்களை பேசிய போது விளையாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் கிரிக்கெட் தொடர்பான பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் தான் முழு பங்களிப்பு செய்ய முடியும் என்றும் அனில் கும்ப்ளே ஜெகன் மோகன் ரெட்டியிடம் கூறியதாக ஆந்திர ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    Also Read: தவான் லெவனை தோற்கடித்த புவனேஷ்வர் லெவன்: பயிற்சி ஆட்ட்த்தில் சுவாரசியம்

    மேலும் ஆந்திராவில் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் ஆரம்பிக்குமாறு கும்ப்ளே ஆலோசனை வழங்கினார்.
    ஜலந்தர் மற்றும் மீரட்டில் இத்தகைய விளையாட்டு உபகரணங்கள், பொருட்கள் தயாரிப்பு ஆலைகளைப் பற்றி கூறிய அனில் கும்ப்ளே அத்தகைய தொழிற்சாலைகள் ஆந்திராவிலும் இருப்பது விளையாட்டை வளர்க்க உதவும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே ஸ்பின்னர் அனில் கும்ப்ளே என்பதோடு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு எதிராக உலக சாதனையை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

    Also Read: Theatres: ஜுலை 8 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!
     இந்திய கிரிக்கெட் அணிக்கு கோலி கேப்டன்சியில் பயிற்சியாளராக இருந்தா அனில் கும்ப்ளே. மிகவும் கட்டுக்கோப்பானவர், கடும் ஒழுக்கவாதி, இதனால் கோலிக்கும் இவருக்கும் சிக்கல் ஏற்பட்டு கோலி இவரை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சியில் பிசிசிஐ-யும் செவிசாய்க்க இவரது பயிற்சிக்காலம் அத்தோடு முடிந்தது. இழப்பு கோலிக்கல்ல இந்திய அணிக்குத்தான்.
    Published by:Muthukumar
    First published: