வரலாற்றை மாற்றுமா இந்தியா? - 21 ஆண்டுகளுக்கு பின் சீனாவுடன் மோதல்

நேரு கோப்பை சர்வதேச கால்பந்து தொடரில் சீன அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.

வரலாற்றை மாற்றுமா இந்தியா? - 21 ஆண்டுகளுக்கு பின் சீனாவுடன் மோதல்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: October 13, 2018, 4:12 PM IST
  • Share this:
நேரு கோப்பை சர்வதேச கால்பந்து தொடரில் சீன அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இதுவரை சீனாவுக்கு எதிராக வென்றதே இல்லை என்ற வரலாற்றை இந்தியா மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேரு கோப்பை சர்வதேச கால்பந்து தொடரை இந்திய கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நேரு கோப்பை சீனாவில் நடந்து வருகிறது. சுஸூவ் நகரில் நடக்கும் இன்றைய போட்டியில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சீன மண்ணில் இந்திய அணி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது.

இதுவரை 17 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு போட்டி கூட வென்றது இல்லை. சீனா 12 முறை வென்றுள்ளது. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு கொச்சியில் நடந்த நேரு கோப்பை தொடரில் சீனா 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது.


வெற்றியைக் கொண்டாடும் இந்திய கால்பந்து அணி


21 ஆண்டுகளுக்கு பின் சீனாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிபா தரவரிசையில் இந்தியா 97-வது இடத்திலும், சீனா 76-வது இடத்திலும் உள்ளது.

சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜிங்கான் உள்ளிட்டோர் அடங்கிய இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சமீபத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால், சீனாவுக்கு கடும் சவால் இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவதால் சீனாவும் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது.
சுனில் சேத்ரி


இந்த ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தினால் இந்திய அணி வீரர்கள் மனதளவில் மிகப்பெரிய போட்டிக்கு தயாராகிவிடுவார்கள் என கால்பந்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்